சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை 100 சதவீதம் தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.ஆனால் விமான நிலையங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வருவாய் பங்கீட்டு அடிப்படையில் விமான நிலைய நிர்வாகத்தை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். சென்னை விமான நிலையம் 2,325 கோடி ரூபாய் செலவிலும், கோல்கட்டா விமான நிலையம், 2,015 கோடி ரூபாய் செலவிலும் இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தால் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில நாட்களில் சென்னை, லக்னோ விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிப்பதற்கு தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் என விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சில வாரங்களில், ஜோத்பூர், குவாஹட்டி, ஆமதாபாத், கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை நிர்வகித்து பராமரித்து மேம்படுத்துவதற்கு விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். தேர்வு செய்யப்படும் நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கப்பட்டால் அவற்றுக்கு 30 ஆண்டு காலம் விமான நிலையத்தை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் வருவாயில் பங்களிப்பு என்ற முறையில் குறிப்பிட்ட தொகையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பெறும் எனவும் ஆனால் அந்நிறுவனங்களில் ஆணையத்தின் பங்கு முதலீடு இருக்காது என்வும் தெரிய வருகிறது.
தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பங்கு முதலீடு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அதே சமயம் டில்லி மற்றும் மும்பையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கொண்டுள்ள தலா 26 சதவீத பங்கு முதலீடு நீடிக்கும். இதே போன்று ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கொண்டுள்ள தலா, 13 சதவீத பங்கு முதலீட்டிலும் மாற்றம் இருக்காது என அந்த அதிகாரி மேலும் கூறினார்.
English Summary:
Govt to offer 100% stake in 6 airports to private operators
The Union government is mulling over prospects to allow private parties 100% equity in 6 airports across the country. This includes the Chennai and Kolkata airports. According to reports, the government will allow to pick up 100% stake in six airports developed by Airports Authority of India (AAI). The provision to pick up 100% stake was allowed only in green field airports until now and not brownfield airports. Currently, airports at Delhi, Mumbai, Hyderabad and Bangalore have private stake holders. The airports would likely be leased out on concession basis for 30 years, it was reported. Added to this, the AAI would get a revenue share which is to be discussed with private parties during the bidding process. Reports said that the Civil Aviation Ministry would issue Requests For Qualification (RFQ) document in a few days for Chennai and Lucknow airports. Further they would issue RFQ to airports like Guwahati, Ahmedabad, Jodhpur and Kolkata. It was reported that Delhi and Mumbai airports contribute over 46% to the AAI which owns only 26% of these airports. Also, AAI would have members represent them in the board of the private airport.