சென்னை: தமிழகத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இது சற்று வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் சூழல் உள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வலு மேலும் அதிகரிக்கக் கூடும் நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மலைப் பகுதியில் அடங்கிய மாவட்டங்களான நீலகிரி கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் இதரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்கள் வடக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல், அந்தமான் கடற் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
- ஒரே தேசம், ஒரே தேர்தல் & முறையை செயல்படுத்த முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி.
- Supreme court Directs To Extend Video Conference Facility Between the accused and Advocate In All Cases Where Accused Facing Trial who is in prison
- குற்றத்தைக் குறைக்கும் `திறந்தவெளிச் சிறை’ – ஸ்வீடன் அரசின் அட்டகாச ஐடியா!
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- விதி 110 அறிவிப்பு அரசாணையாக மாறுவது எப்படி? சட்டப்பேரவை அறிவிப்புகளும் திட்டச் செயல்பாடும்
- உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழ்: சட்டப்பேரவைத் தீர்மானமும் அரசமைப்புப் பிரிவு 348(2) சொல்வதும்
- குழந்தை பாதிக்கப்பட்ட வழக்கு: காணொளிகளை நீக்க முடியாவிட்டால் 17 இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
← முந்தைய செய்தி: குற்றத்தைக் குறைக்கும் `திறந்தவெளிச் சிறை’ – ஸ்வீடன் அரசின் அட்டகாச ஐடியா!
அடுத்த செய்தி →: ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை : ரஜினி மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ தகவல்

