லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரச்சாரம் செய்ய கொண்டு வந்துள்ளது பாஜக தலைமை. சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இடையே மோதலால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார்.
இருமுறை யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால் அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் இறங்கி அங்கேயிருந்து கார் மூலமாக புருலியா சென்று கூட்டத்தில் கலந்து கொண்டார் .அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டரிடம் உரையாடிய போது மமதா பானர்ஜி சக முதல்வருக்கே ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கும் அளவுக்கு சர்வாதிகார குணம் கொண்டவர் என குற்றம்சாட்டி அவருடைய கோபத்தை வெளிப்படுத்தினார் யோகி ஆதித்யநாத்.
இதையும் படியுங்கள்
- ஒரு வருடம் எல்.எல்.எம் பாடநெறியை ஒழிக்கும் விதிகள் இந்த ஆண்டு செயல்படுத்தப்படாது: இந்திய பார் கவுன்சில்
- 26 வயது மருத்துவர் கொரோனாவால் பலி: டெல்லியில் சோகம்
- திருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- விஜய் தேர்தல் வழக்கு: குழந்தைகளிடம் கேட்டது ஊழல் நடைமுறை ஆகாது; சேலம் வடக்கு தேர்தல் மனுவை நிராகரிக்கும் நிலையில் உயர் நீதிமன்றம்
- கவின் ஆணவக் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
← முந்தைய செய்தி: 15 ஆண்களை கல்யாணம் செய்து நகை, பணம் மோசடி செய்த மகாலட்சுமி
அடுத்த செய்தி →: சந்தியாவை நான் கொல்லவில்லை என்று கோர்ட்டில் கூறிய சைக்கோ பாலகிருஷ்ணன்!

