ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் 350 கிலோ வெடி மருந்து காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்து மீது மோதினான். இதில் ரிசர்வ் போலீஸ் படையினர் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர்.
ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது .
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர் . அடில் அகமது கடந்த வருடம்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீவிரவாத தாக்குதலுக்கு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு காஷ்மீர் உயர் காவல்துறை அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது . 20 வருடங்களில் காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவே ஆகும் .