காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சுப்ரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது . தாக்குதல் நடந்த அன்று மதியம் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. சுப்ரமணியனுடன் பலியான மற்றொரு தமிழக வீரர் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்
- பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள்
- அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!
- காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி
அடுத்த செய்தி →: பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள்

