மன்னார்குடி:15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளார் மகாலட்சுமி.மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆனதால் 2-வது கல்யாணம் செய்து கொள்ள மேட்டர்மோனி மூலமாக ஒரு திருச்சியை சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு 2017-ம் வருடம் திருமணம் நடைபெற்றது.
பிறகு வேலை சம்மந்தமாக உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஒருநாள் மகாலட்சுமி நான் கர்ப்பமாக இருப்பதாக போனில் உதயகுமாரிடம் தெரிவித்தார். இதை அறிந்த உதயகுமார் சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு வந்தார் .மகாலட்சுமிக்கு சந்தோஷப்படுத்த எதுவுமே சொல்லாமல் திடீரென வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. அதனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு கொண்டு மகாலட்சுமி எப்போவே போய் விட்டதாக சொன்னார்கள்.
செல்போன் ஸ்விட்ச் ஆப் என்பதால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார் மகாலட்சுமியை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்நிலையில் மகாலட்சுமியின் ஃபேஸ்புக் பார்த்தபோது ஏராளமான ஆண்களுடன் மகாலட்சுமிக்கு தொடர்பு இருந்தது என்பது தெரியவந்தது.பலரிடம் புகைப்படம் மற்றும் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக பதிவிட்டுள்ளார். மகாலட்சுமிக்கு ஏற்கனவே 15 பேருடன் கல்யாணம் ஆகியுள்ளது . 6 மாசத்துக்கு ஒரு கல்யாணம் மற்றும் கருவு கலைத்தும் உள்ளார். தன்னை போலவே 15 பேரை ஏமாற்றிய பெண்ணை கண்டுபிடித்து தருமாறும், அவரிடமிருந்து தனது பணம், நகைகளை மீட்டு தருமாறும் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் திருச்சியில் கருவை கலைத்துள்ளதற்கான ஆதாரத்தை காவல் நிலையத்தில் உதயகுமார் ஒப்படைத்தார்.