நிர்மலாதேவி பாலியல் புகார் வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ய தடை உத்தரவு : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை)

Interim Stay due to Unsatisfied With CBCID Probe in Nirmala Devi case: Madras High Court(Madurai Bench) Unhappy with CB CID probe in Nirmala Devi case, Madras High Court(Madurai Bench) issued interim stay for further Enquiry. The petitioner Conveyed that the CB-CID had deliberately not probed higher officials involved in this case and for whom Nirmala Devi was allegedly soliciting sexual activity obligations from the students.

மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய புகாரில் கைதான தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் சுகந்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு பின்வருமாறு:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, அக்கல்லூரி பயின்ற மாணவிகள் சில பேரை தவறான பாதைக்கு வழி வகுத்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இவ்வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். இவ்வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்தார்கள். தற்சமயம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=uG0r3qCX2CY&w=560&h=315]

இச்சம்பவத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தைச்சேர்ந்த உயர் அதிகாரிகள் பல பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனினும், அவர்களுடைய பெயர் மற்றும் விபரங்கள் இவ்வழக்கில் சேர்க்கப்படவில்லை. அங்குள்ள கல்லூரி மாணவிகளைத் தவறான இலக்குக்கு அழைத்ததாக உதவிப்பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடை பெற்று வரும் நிலையில், அவர் எவருக்காக மாணவிகளிடம் அப்படி பேசினார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை. உயரதிகாரிகள் என்று ஒரே வரியில் சுருக்கிவிடும் காவல்துறையினர் அவர்கள் யார் யார் என்று விசாரிக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறையின் செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் எனும் பட்டியலுக்குள் வரும் இந்த நிலையில், அந்த உயரதிகாரி யார் என சொல்லவோ, அவர்களிடம் மேல் விசாரணை செய்யவோ இல்லை. சிபிசிஐடி காவல்துறையினர் கண்துடைப்பு நடவடிக்கையாக விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். ஆகவே, நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடியினரிடம் சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். அதுவரையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் நிர்மலாதேவி வழக்கிணை விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிஅரசர்கள் என்.கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை. நிர்மலா தேவி மற்றும் அவருக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களை வைத்து விசாரணையை முடித்துள்ளார்கள். எனினும் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவில் உயர் அதிகாரிகள் என குறிப்பிட்டுள்ளார். எனினும் சிபிசிஐடி காவல்துறை விசாரணை அதிகாரிகள் இவைகளை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கருத்தில் கொள்ளாமல், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்ட மூன்று பேரை மட்டுமே வைத்து வழக்கை முடிவுக்கு கொண்டுவர எண்ணுகிறார்கள். ஆகவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து நீதியரசர்கள், நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. அதேசமயம், அனைத்து விசாரணையும் முடிந்த நிலையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பின் நிர்மலா தேவிக்கு ஏன் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. அவரை வெளியே விடுவதில் அரசுக்கு என்ன அச்சம் ?. அவர் மாணவிகளிடம் சொன்ன அந்த உயர் அதிகாரிகள் உயரதிகாரிகள் எவர் எவர் ?. அவர்களிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளப்பட்டதா ?.

மேலும் இச்சம்பவம் சம்பந்தமான விசாரணை மேற்கொண்ட சந்தானம் குழுவின் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதி அரசர்கள், இவ்வழக்கில் சிபிசிஐடியினர் விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதால், நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்கள். அதேசமயம், மனுவுக்கு சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலாதேவி, கருப்பசாமி மற்றும் முருகன்ஆகியோர் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.

Interim Stay due to Unsatisfied With CBCID Probe in Nirmala Devi case: Madras High Court(Madurai Bench)

Unhappy with CB CID probe in Nirmala Devi case, Madras High Court(Madurai Bench) issued interim stay for further Enquiry. The petitioner Conveyed that the CB-CID had deliberately not probed higher officials involved in this case and for whom Nirmala Devi was allegedly soliciting sexual activity obligations from the students.

 

Related posts