லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி.அவர் தன்னுடைய பெண்ணுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு சீத்தாராமன் அக்கிராம நிர்வாக அலுவலரை அணுகி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகவும் ரூ.1000 லஞ்சமாக கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாக கூறியதாகவும் ,லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜீவ்காந்தி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி கடந்த 7.1.2011 அன்று அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி வழங்கியுள்ளார். அதை மறைந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை சீத்தாராமனை பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. நேற்று நீதிபதி பிரியா அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts