ஹாங்காங்கில் மிகப்பெரிய வைரக்கல் ஏலம்

World Biggest Diamond to be Auctioned in Hong Kong!

World Biggest Diamond to be Auctioned in Hong Kong!
World Biggest Diamond to be Auctioned in Hong Kong!

ஆப்பிரிக்க நாட்டில் ஒரு புகழ்பெற்ற வைரச்சுரங்கத்தில் 2011ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய அளவு வைரக்கல் கிடைத்தது.  இதன் எடை மட்டுமே 299 காரட். வெள்ளை நிறத்தில் உள்ளதை கொள்ளை கொள்ளும் வகையில் பட்டைத் தீட்டப்பட்டு 118.28 காரட்டாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய வைரக்கல் ஹாங்காங்கில் உள்ள சோத்பீ என்ற மையத்தில் வருகிற 2013 அக்டோபர் மாததில் ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஏலத்தில், அந்த வைரக்கல் சுமார் ரூ.200 கோடியில் இருந்து ரூ.238 கோடிவரை ஏலம் போக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 101.73 காரட் எடை கொண்ட வைரம் கடந்த ஆண்டு 180 கோடிக்கு ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அந்த ஏலம் தான் அதிக அளவில் போய் சாதனை புரிந்தது. எனினும் தற்போது உள்ள இந்த வைரம் அந்த சாதனையை முறியடிக்கும் என நம்பப்படுகிறது.  இந்த வைரத்துடன் 7.59 காரட் எடையுள்ள நீல நிற வைரமும் ஏலத்தில் விடப்படுகிறது. நீல நிற வைரம் சுமார் ரூ.140 கோடிக்கு ஏலம் போக  வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

World Biggest Diamond to be Auctioned in Hong Kong!

Related posts