கர்நாடக:கல்புர்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் தேசியக் கொடியை ஏற்றி வழிநடத்தக் கோரி ரமேஷ் கஜாரே பொது நல மனுவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2002 ஆம் ஆண்டின் கொடி குறியீடு படி கல்வி நிறுவனங்கள் தேசியக் கொடியைக் காண்பிப்பதை கட்டாயமாக்கவில்லை” என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
கல்வி நிறுவனங்கள் தேசியக் கொடியை ஏற்றுவது கட்டாயமில்லை – கர்நாடக உயர்நீதிமன்றம்
