டெல்லி :மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா வழங்க இந்திய யூனியனுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர் .மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே,மகாத்மா காந்தி மக்களால் மிகுந்த மரியாதைக்குரியவர்.அவர் தேசத்தின் தந்தை .அவர் எந்தவொரு முறையான அங்கீகாரத்திற்கும் அப்பாற்பட்டவர் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.ஆனால் மனுதாரர் அரசாங்கத்தின் முன் பிரதிநிதித்துவம் செய்ய அனுமதித்தார்.
மகாத்மா காந்தி பாரத் ரத்னாவை விட உயர்ந்தவர்-உச்சநீதிமன்றம்
