சென்னை:பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் இசை கூடம் உள்ளது .அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை வற்புறுத்தியது.இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி நகர சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரங்களில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க உத்தரவிட்டது.
இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான வழக்கை விரைவில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
