Bonda tribe sends its 1st MLA to Assembly
இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடியினத்தவரில் இருந்து முதலாவது எம்.எல்.ஏவாக தம்பரு சிசா தேர்வ்சு செய்யப்பட்டுள்ளார். ஒடிஷா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் ‘போண்டா ஹில்ஸ்” என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு போண்டா எனப்படும் ஆதிபழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் இப்பகுதியில் மட்டுமே போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர். இப்பழங்குடி இனப் பெண்கள் கழுத்து நிறைய பெரிய வளையங்கள், காலுக்கு மேலான துண்டு போன்ற கீழாடை, உடல் முழுக்க கயிறு, பாசிகளால் மறைக்கப்பட்ட மேலாடை, தலையில் சணல் வளையம் என ஆதிகால பண்பாட்டை இன்னமும் பின்பற்றுகிறவர்களாக போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். போண்டா பழங்குடியின திருமணமுறை மிகவும் வித்தியாசமானது. சிறுவர்களைத்தான் இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். போண்டா ஹில்ஸ் பகுதி இப்போது மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கிறது.
இங்கு அண்மையில் நடைபெற்ற ஒடிஷா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட 33 வயது தம்பரு சிசா வெற்றி பெற்று போண்டா பழங்குடியினத்தின் முதல் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தம்பரு சிசா, சித்ரகோண்டா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். போண்டா ஹில்ஸ்க்கு செல்லும் சமவெளிப்பகுதிதான் சித்ரகோண்டா.
தற்போது எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தம்பரு சிசா, கணிதவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். போண்டா மக்களிடத்தில் கல்வியறிவு வெறும் 8% மட்டுமே இருப்பதால் அப்பகுதியில் கல்வி அறிவுக்குத்தான் முதல் முன்னுரிமை கொடுப்பேன் என்கிறேன் தம்பரு. 12 வயதில் பெற்றோரை இழந்த தம்பரு சிசா, கோரபுட் மாவட்டத்தில் உள்ள சர்வோதய சமிதி என்ற நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bonda tribe sends its 1st MLA to Assembly
The Bonda community sent its first MLA to the State Assembly friday when thirty-three-year-old Dambaru Sisa, took oath among over 100 newly elected MLAs including Chief Minister Naveen Patnaik. “I am happy to being the first member from the Bonda community to become an MLA. I will certainly try to project the plights of my community in the assembly,” Sisa, a post graduate in Mathematics and law says with pride. Sisa belongs to Bonda tribe, identified as one of the Particularly Vulnerable Tribal Group (PVTG), whose existence is only found in Odisha’s Malkangiri district. Recalling his childhood days, Sisa says that he was fortunate enough among the community to get patronage of Sarvoday Samiti headed by Akshya Mohanty in Koraput district. “I had lost my parents at the age of 12. I was picked up by Mohanty who made me what I am today,” Sisa said expressing his gratitude towards Sarvoday Samiti. Being the first among the Bonda tribe to hold masters degree, Sisa said: “My priority will be providing health, education and sanitation”. The literary rate among the Bonda tribes is only 8 per cent. Bonda tribes, which often being projected wrongly by some mischievous tour operators as “human safari” for their ancient culture of covering upper body parts with metals instead of clothes, lives in Bonda Hills which is divided by Upper Bondas and Lower Bondas. While Sisa’s mother hailed from Upper Bonda Hills, his father was from the lower Bonda area. The young MLA represents both the upper and lower Bonda communities. Sisa, the first Bonda to contest elections was elected to assembly from Chitrakonda assembly segment on BJD ticket. Though Sisa joined CRPF as a constable, he quit the job to work for the community. “I was not interested in politics, but for the plight of my community and therefore joined politics”, he said.