Case regarding legalization of Mercy Killing in Supreme Court
நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது குணப்படுத்தவே முடியாத நோயால் துண்புருவோரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பதைக் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் கூறுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், “காமன் காஸ்” தொண்டு நிறுவனம் ஒன்று, மருந்துகளால் காப்பாற்ற முடியாது என்ற நிலையிலுள்ள நோயாளிகளை அவர்கள் விருப்பினால், கருணைக் கொலை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு கொடுத்துள்ளது. இந்த மனு, அரசியல் சாசன அமர்விலுள்ள ஆர்.எம்.லோதா, ஏ.கே.சிக்ரி, சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் முன்பு வந்தது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனுதாரர் சார்பில் ஆஜரானார். அவர், “உச்ச நீதிமன்றத்தில் முன்பே இந்த விவகாரம் குறித்த வழக்குகள் நடந்தபோது, கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று கூறினர். ஒருவரை கண்டிப்பாக குணப்படுத்த முடியாது என டாக்டர்கள் முடிவெடுத்துவிட்ட பெறகு, நொயளியின் அவதியைக் குறைக்க கருணைக் கொலை செய்வது தவறில்லை. ஆகவே, சட்டப்பூர்வமாக இதனை அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார். மத்திய அரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜரானார். அவர், “கருணைக் கொலை நோயாளிகளின் சம்மதத்துடன் நடந்தாலும் அதுவும் தற்கொலைதான். சட்டப்படி தற்கொலை செய்வதும் அதர்க்கு முயற்சிப்பதும் மற்றும் தற்கொலைக்கு தூண்டு வதும் குற்றம்தான்” என வாதிட்டார்.
அந்தி அர்ஜூனா “அமைகஸ் குரி”யாக நியமனம்
இந்த வழக்கில் உதவ “அமைகஸ் குரி”யாக (அறிவுரையாளராக) முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் அந்தி அர்ஜூனாவை நீதிபதிகள் நியமித்தனர். இதை குறித்து நாடு முழுவதும் விவாதிப்பது அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கருணைக் கொலையைப் பற்றி அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கருணைக்கொலை தவறில்லை: சிவசங்கரி
1980-களில் கருணைக்கொலை என்ற சொல்லே புதியதாக இருந்த நிலையில் ‘கருணைக்கொலை’ என்ற நாவலை எழுத்தாளர் சிவசங்கரி எழுதினார். அவர் கூறுகயில், “இந்நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் கடந்தும் கருணைக்கொலையைப் பற்றிய விவாதங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றது. கருணைக்கொலை உணர்வுப்பூர்வமானது அதைச் சட்டத்தால் மட்டும் முடிவு செய்யப்படக்கூடியது. மத்திய அரசு கருணைக்கொலையை தற்கொலையின் மற்றொரு வடிவம் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. அதே நேரம், நோயின் இறுதி நிலையிலுள்ளவர், அதன் வலி தாங்காமல் கருணைக்கொலை முடிவெடுப்பது தவறில்லை. என்னால் இந்த வேதனைப் பொருத்துக்கொள்ள முடியவில்லை, நான் வாழ்ந்தது போதும், என்று நினைப்பவரை, “நீங்கள் வாழதான் வேண்டும்” என்று கூறுவது நியாயமற்றது. ஆகவே, நான் கருணைக்கொலையை ஆமோதிக்கிறேன்”
Case regarding legalization of Mercy Killing in Supreme Court
A Case was under supervision of Supreme Court regarding Mercy Killing. Supreme court has issued notice to the state governments and union territories to answer their opinion on this issue.
A charitable trust, “Common cause” filed the case to legalize the Mercy killing to those who suffering from diseases and cannot be cured by medicines with their approval. This case came in to the bench of judges R. M. Lodha, A. K. Sikri, Salameshvar, Rohinton Nariman, J. S. Kehar.
Advocate Prashant Bhushan, represents the petitioner argued that Mercy killing was already allowed in some cases and mercy killing will reduce the pain of the suffering people. But opposing party Attorney General Mughul Rothgi argued that Mercy killing is also a way of suicide and suicide is a crime and forcing it is also a crime. Supreme court has appointed former Solicitor General Andhi Arjuna as the mentor and issued notice to the State Government and Union Territories to answer on Legalizing Mercy killing within 8 weeks.
Writer Sivasankari, who wrote a book named “Mercy Killing” in 1980 when the word is new to the world says on this matter that Mercy Killing could not be decided on the law it is based on the emotional feelings. Government sayings about Mercy Killing as Suicide is acceptable but we cannot force a person suffering in death pain to live. She also says that she is accepting Mercy Killing.
ADVERTISEMENT: To purchase plots or land with approval, click here