Hong Kong: Son Accused of ‘Killing and Cooking His Parents’ Appears in Court
பெற்றோரின் உடலை துண்டு துண்டாக வெட்டி மைக்ரோ ஓவனில் சமைத்து டிபன்பாக்ஸில் அடைத்து வைத்த மகன் கைது செய்யப்பட்டான். ஹாங்காங்கை சேர்ந்த தம்பதிகள் சா-வூங்-கி (வயது 65), சியூ-யூட்-ஈ (வயது 62). இவர்களது மகன் ஹென்றி ச்சு (வயது 30). கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தம்பதிகளை காணவில்லை. ஆனால் இதுகுறித்து மகன் அருகில் இருந்தவர்களிடம் தனது பெற்றோர்கள் சீனாவிற்கு சுற்றுபயணம் சென்று இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது பெற்றோரை கொன்று விட்டதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஹென்றி ச்சு பெற்றோர்களின் தலையை தனியாக வெட்டி எடுத்து உப்புடன் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அந்த தலைகளை பிரிட்ஜில் வைத்துள்ளான். இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடல் பகுதிகளை துண்டு துண்டாக வெட்டி, மைக்ரோ ஓவனில் சமையல் செய்து அதை டிபன் பாக்ஸில் அடைத்து வைத்துள்ளான்.
ஹென்றி ச்சு-விடம் விசாரணை நடத்தியதில் தனது நண்பன் சே சுன் கீயுடன் சேர்ந்து பெற்றோரை கொலை செய்ததை ஒப்பு கொண்டான். காணமால் போனவர்கள் எனக்கூறி போலீசார் வழக்கை கைவிட பெற்றோரின் உடலை நானும் எனது நண்பனும் துண்டு துண்டாக வெட்டியதாக கூறினான். அவனையும் அவனது நண்பரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதுகுறித்து இணையதளம் ஒன்றில் என்னால் மக்களின் வேதனை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் எனது குழந்தை பருவத்திலிருந்து இளமை காலம் வரை எனது அனுபவம் அப்படி இருந்தது என சூ கூறியுள்ளான். இது தொடர்பான வழக்கு ஹாங்காங் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
Hong Kong: Son Accused of ‘Killing and Cooking His Parents’ Appears in Court
A couple who were allegedly murdered by their son and one of his friends were dismembered and cooked in a microwave oven, a court in Hong Kong has heard. Prosecutors say Henry Chau Hoi-leung, 30, killed his 63-year-old mother Siu Yuet-yee and 64-year-old father Chau Wing-ki, with the help of an accomplice identified as Tse Chun-kei, 36. Police found the heads of the couple inside a fridge in a flat in the Tai Kwok Tsui district in March last year. Chau and Tse pleaded not guilty to murder at the first hearing of their trial in the former British colony, the South China Morning Post reported. Prosecutor Michael Arthur told the court that the pair had been planning the killing for months. Chau and Tse allegedly bought two microwave ovens, a rice cooker and a number of knives in preparation for their gruesome plan, up to three months before luring Chau’s parents to the flat with an excuse. The court heard that the victims’ dismembered bodies were found as police raided the flat after Chau told detectives investigating his parents’ disappearance that they had crossed to the Chinese mainland for a pleasure trip. Police had found no record of them leaving Hong Kong. Beside the married couple’s heads, authorities found other body parts stored in bags and boxes at the premises. The court heard that some had been salted and microwaved, The Standard reported.