Four school students drown in Viswanatham
சிவகாசி அருகே மண் அள்ளியதில் ஏற்பட்ட பள்ளத்தில், மழை நீர் தேங்கிய நிலையில்,அதில் குளித்த பள்ளி மாணவர்கள் நான்குபேர், நீரில் மூழ்கி பலியாகினர். சிவகாசி அருகே உள்ளது விஸ்வநத்தம்.இங்குள்ள தெற்கு பகுதியில் தொடர்ந்து மண் அள்ளியதால் பெரும்பள்ளம் ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில், பள்ளத்தில் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால், தேங்கிய நீரில் குளிக்க, விஸ்வநத்தத்தை சேர்ந்த ஏழு மாணவர்கள், நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்றனர்.
இதில் நான்கு பேர் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மண் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கினர். இதை பார்த்த மற்ற மாணவர்கள், அருகில் உள்ள பட்டாசு ஆலைக்கு சென்று தகவல் கொடுத்தனர். தொழிலாளர்கள், நீரில் மூழ்கிய மாணவர்கள் உடல்களை தேடினர்.விஸ்வநத்தத்தில் உள்ள் தனியார் மெட்ரிக்., பள்ளியில் ஐந்தாம்வகுப்பு மாணவன் விநாயகர்காலனியை சேர்ந்த அருண்பாண்டியன், 10, அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன் ராஜபாண்டி, 13, சிவகாசி தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவர் சண்முகம், 16, பத்தாம் வகுப்பு மாணவர் பிரகாஷ், 15, ஆகியோர் உடல்களை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகாசி டவுன்போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகாசி அரசு மருத்துவமனை வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் ஹரிஹரன் ஆகியோர், பலியான மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.பலியான ராஜபாண்டி உறவினர் மகேந்திரன் கூறுகையில், “ வெளியில் எங்கும் செல்லமாட்டான். நேற்று தான் குளிக்க சென்று உள்ளான். சகதியில் சிக்கி பலியாகி உள்ளான்,” என்றார்.பிரகாசின் அத்தை தமிழரசி கூறுகையில், “வீட்டின் ஒரே மகன் பிரகாஷ். அவனை, தாய் கோமதி செல்லமாக வளர்த்தாள். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட தான் செல்வான். குளிக்க சென்றவன், வீடு திரும்பவில்லை,”என்றார் .
Four school students drown in Viswanatham
Four school students died at Viswanatham near Sivakasi on Sunday evening after drowning while swimming in a pond. According to police, a class five student M. Arunpandian (10), a class eight student R. Rajapandian (13), a class eleven student M. Shanmugam (16) and a class ten student R. Prakash (15) had gone along with three other friends to take bath in a pond at Viswanatham around 5 p.m. Less than fifteen minutes after they started swimming, the four boys drowned unable to swim properly, the police said. The other three boys who had accompanied them alerted the people nearby, who fished out the bodies. The bodies were taken to Government Hospital, Sivakasi for post-mortem.