cricket player srishaanth cricket gambling life will come as a movie
பிரபல கிரிக்கெட் வீரர் “ஸ்ரீஷாந்த்” ஐ பி எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் , அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது, மற்றும் 7ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து “கிரிக்கெட்” என்ற பெயரில் மலயாளத்தில் திரைப்படம் தயாராக உள்ளது இப்படத்தினை மலையாள பட தயாரிப்பாளர் ஷாஜி கைலாஷ் ஏ கே சாஜன் தயாரிக்க உள்ளனர் கதை வசனத்தை சாஜன் எழுதுகிறார். “ஸ்ரீஷாந்த்” கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை மைய்யமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது என கதைக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் ஒரு இளைஞன் ஆல் ரவுண்டராக விளையாட வாய்ப்பு கிடைக்க தன் திறமையை கொண்டு கடின உழைப்பாள் கிரிக்கெட் உலகில் உச்சத்திற்கு வருகிறான். புகழின் விளிம்பில் சென்றபிறகு பேராசை காரணமாக தவறான வழியில் தன் திறமையை உபயோகிக்க வாழ்க்கையின் கடை மட்டதிர்க்க்கு தள்ளப் படுகிறான். இதை மைய கதையாக வைத்து படம் தயாராக உள்ளது. ஸ்ரீசாந்த் இளைஞ்சர்களின் ரோல்மாடலாக இருக்க வேண்டியவர் , அனால் அவர் தன்னைத்தானே அழித்துக் கொண்டதற்கு பேராசையே காரணம், பல இளைஞ்சர்கள் இப்படி தவறான வழியில் இன்று செல்கின்றனர் இது தவறான ஒரு முடிவு என்பதை கூறும் படம் தான் இது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.