சென்னை: செப்டம்பர் 15, 2018
இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி . பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனம் ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் தினந்தோறும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறையே காரணம்.நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது. இன்று சென்னையில் ஒரு பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை ஆகிறது . இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர் . இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.