சென்னை: செப்டம்பர் 22, 2018
சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் 8ம் வகுப்பு மாணவி வாணி (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டார். அதனால் வாணி தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்ற வாணியிடம்குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (36) என்பவர் பேசுவது போல் அருகில் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய வாணி பாட்டியிடம் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் வாணியின் பாட்டி செல்வம் மீது புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.