தமிழகத்தில் ராமேசுவரம் உள்பட 13 கடலோர மாவட்டங்களில் மீன் பிடிக்கத் தடை காலம் திங்கள்கிழமை தொடங்கியது. இத் தடை மே மாதம் 29 ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு அமலில் இருக்கும்.
மீன் பிடிக்கத் தடைக் காலம் தொடங்கியதுஇதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன்கள் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.