செயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை

செயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 31 2019 தண்ணீர்ப் பற்றாக்குறையைப் தீர்க்க செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா ?. என்று என மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 16 -ஆம் தேதி பொதுப்பணித் துறை உயர் அதிகாரி களுக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்அய்டிஅய்- என்ற தனி யார் அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப் புகளை அகற்றவும், தண்ணீரைச் சேமிக்கவும் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சேமிப்பு குறித்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் 29.3.2019 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரங்கள் அதிகமான அளவில் வெட்டப்படுவது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் பருவ மழை குறைந்து தண்ணீர்த் தேவை அதிகரித்துள்ளது. தற்போது, செயற்கை மழையை நாடும் நிலை உள்ளது. ஆகவே, செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தார்கள்.

News in English

Why don’t Govt Try artificial rain, Asks Madras high court

Chennai: Noting that for the last three years, rain has failed in Tamil Nadu and almost 24 districts are drought affected area and there are no perennial rivers in Tamil Nadu, the Madras high court has directed the Central and state governments to come out with an idea to find out whether there is possibility of bringing rain by artificial methods.

A division bench comprising Justices N.Kirubakaran and S.S.Sundar gave the directive while passing interim orders on a PIL, which among other things sought to take effective steps to store water on a war-footing in Tamil Nadu.

The bench said since the rainfall has become very less and groundwater level was getting depleted, water scarcity has become more acute and the people are left with no drinking water almost in every part of the state and in India. United Nations predicts 14 per cent of the world population would encounter water scarcity in 2025. Therefore, both the Central and the state governments have to use new methods, like cloud seeding to tackle water scarcity. Cloud seeding method was tried in Tamil Nadu in 1980. This court is not able to know the effectiveness of such exercise, the bench added.

The bench said Jeff Dilley, Director of Weather Modification at the Desert Research Institute in Renow claimed in 2016 that new technology and research have produced reliable result that make could seeding as a dependable and affordable water supply practice for many regions.

In 1998, the American Meteorologists Society held precipitation from supercold orographic clouds and the “clouds with development with mountains” has been seasonally increased by about 10 per cent. It was reported that China produced 55 billion tones of artificial rains a year. China spent $ 150 million at the single region artificial rain programme. US spends around $ 15 million a year and it produced 50 Billion tons of artificial rains a year, the bench added.

The bench said it was reported in the media that on March 22, 2019, Sri Lanka successfully conducted a test on artificial rains in the tea growing mountain region where hydro-electric power was generated in a bid to avoid possible power cuts. It was reported that an aircraft sprayed chemicals on clouds about 8,000 feet above one of the reservoirs that provide water to generate hydro-electric power resulting in 45 minutes rain. Both the Central and state governments have to come out with response as to why not they by modern artificial rain making methods including “cloud seeding” generate rain by technology. Why not the governments establish more desalination plants in various coastal districts to tackle the drinking water scarcity? And why not the governments tie up with corporate companies required to discharge corporate social responsibility as per the companies Act.  The bench posted to April 10, further hearing of the case.

 

Related posts