சென்னை: சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் தொடா்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு விவசாய நிலங்களை கைப்பற்றினார்கள் .இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள், நில உரிமையாளா்கள் என சுமாா் 50 போ் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது , இந்த தீர்ப்பில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய உடைமையாளா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரங்களில் சரி செய்து நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு விடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.