மதுரை:மதுரை மாவட்டம் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்படுகிறது. விதிப்படி முக்கிய இணைப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு வேண்டும் .அதே போல் வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். சாலைகளின் நடுவில் செடிகள் நட வேண்டும். ஆனால் இதுபோன்ற பணிகள் நடப்பதில்லை.இதனால் விபத்துகள் தற்போது அதிக அளவில் நடக்கிறது.
தமிழ்நாடு சாலைவிபத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துகிறார்கள்.இதனால் விபத்துகள் நடக்கிறது.வாகனங்களில் கட்சிக்கொடி மற்றும் தலைவர்களின் படங்களை தடைசெய்தாலே 50 சதவீதம் குற்றங்கள் குறைந்துவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த மனு சம்மந்தமாக உள்துறைச் செயலர், போக்குவரத்து முதன்மைச் செயலர் பதிலளிக்க நீதிபதிகள் உத்திரவிட்டனர்.இந்த விசாரணையை ஏப்ரல் மாதம் 23-ம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.