மதுரை:புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி,புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக கேட்டுப் பெறும் வகையில் மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுனர் கிரன் பேடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இந்த உத்தரவை எதிர்த்து புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை பெஞ்சில் வழக்கு தொடர்ந்தார்.எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜர் ஆனார்.இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.இதனால் புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி அறிக்கை பெற முடியாது.
.