கர்நாடகா: விவாகரத்து மனுவில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்ததால் மனைவியால் மனுவிற்கு பதில் அளிக்க முடியவில்லை. ரேணு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்ற தர்வாட் கிளையில் விவாகரத்து மேல்முறையிடு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தெரிவித்தது என்னவென்றால் “என் பெற்றோர் வீடு ராஜஸ்தான் மாநிலம் ஷிரோனியில் உள்ளதால் அங்கு இணை உரிமைகளை மறுசீரமைத்தல் (restitution of conjugal rights) மனுவை தாக்கல் செய்தேன். அப்போது தான் என் கணவருக்கு விவாகரத்து கிடைத்தது பற்றி தெரியவந்தது. தீர்ப்பு நகலை பார்த்த பிறகு தான் எனது விவரங்களை தவறாக கொடுத்து மனுவிற்கு நான் பதில் அளிக்காத அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது”என்று மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதி சத்யநாராயணா மற்றும் நீதிபதி பாட்டில் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் விவாகரத்து வழக்கை புதிய வழக்காக நடத்த உத்தரவிட்டனர். கணவர் மற்றும் மனைவி இருவரையும் ஹுப்பல்லி குடும்ப நீதிமன்றம் முன் அடுத்த விசாரணை தேதியில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
Related posts
அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில், சுமார் 2000-க்கும்...எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...