அலகாபாத்: அலகாபாத் உயர்நீதிமன்றம் மீரட்டில் உள்ள மூத்த காவல்துறை
கண்காணிப்பாளரிடம், பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த எந்தவொரு
உறுப்பினரும், பெண்ணின் சொந்த சமூகத்தினர், உள்ளூர் காவல்துறையினரால்
பெண்ணுக்கும் அவருடைய கணவனுக்கும் எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருப்பதை
உறுதி செய்யுமாறு உத்தரவிட்டது.
இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிய மற்றும் இந்து சடங்குகளின்படி
திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அலகாபாத்
உயர் நீதிமன்றம் புதன்கிழமை காவல்துறைக்கு உத்தரவிட்டது. மதமாற்றம் மற்றும் திருமணத்திற்கு தனது தந்தை ஆட்சேபனை தெரிவித்ததாக பெண் புகார் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.ஜே.முனிர், மீரட்டின் மூத்த காவல்துறை
கண்காணிப்பாளருக்கு, “மனுதாரர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்நாள் முழுவதும்
நீடித்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், எந்தவொரு உறுப்பினரால்
பெண்ணுக்கும் அவரது கணவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ளவும், பெண்ணின் குடும்பம் அவரது சொந்த சமூகம் மற்றும் உள்ளூர்
காவல்துறையினரால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று கேட்டு கொண்டார்.