பெங்களூரு : இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ், மைனர் பெண்ணைக் கையகப்படுத்துதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போக்சோவின் பிரிவு 7 இன் கீழ் கூடுதல் குற்றச்சாட்டாக மாற்ற, கோலார் II கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அனுமதித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டை குற்றவியல் விசாரணையில் சேர்க்கலாம் என்று தீர்ப்பளித்து, “சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை” என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 216 இன் கீழ், POCSO இன் கீழ் குற்றத்தைச் சேர்க்க குற்றச்சாட்டை மாற்றுமாறு அரசுத் தரப்பு கோரியது சரியானது என்று கூறிய உயர்நீதிமன்றம், POCSO சட்டத்தின் பிரிவு 7, சிறார்களின் குறிப்பிட்ட ”பாலியல் பாகங்களை” பாலியல் நோக்கத்துடன் தொடும் செயல்களையும் மேலும் ”உடலுறவை உள்ளடக்கிய” ஆனால் ஊடுருவல் இல்லாமல் பாலியல் நோக்கத்துடன் செய்யப்படும் வேறு எந்த செயலையும் இது கையாள்கிறது என்று இந்த அமர்வு கூறியது.
பெண் சிறுமி விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது உடலின் தகாத இடங்களைத் தொட்டதாக சாட்சியமளித்தார், இது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டாக சேர்த்து வழக்குத் தொடர வழிவகுத்தது. பாதிக்கப்பட்ட சிறுமி டிசம்பர் 1, 2016 அன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த குற்றவாளி அவளைப் பள்ளியில் விடுவதாகத் தெரிவித்தார். ஆனால், மற்ற இரண்டு குற்றவாளிகளுடன் சேர்ந்து, நான்காவது குற்றவாளிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவளை கடத்திச் சென்றான். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி, போலீசில் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவரைத் தவிர, மற்றவர்கள் மீது IPC – ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றச்சாட்டை மாற்றி, போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் சேர்க்குமாறு அரசுத் தரப்பு கோரியதை ஏற்ற செஷன்ஸ் நீதிபதி டிசம்பர் 12, 2021 அன்று pocso சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்தார். செஷன்ஸ் நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னாவின் தனி நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.