separate Telangana state
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் புதிய மாநிலம் உருவாக்கப்படும். இது நாட்டின் 29ஆவது மாநிலமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜீத் சிங், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய லோக் தள தலைவர் அஜீத் சிங் கூறுகையில், “”ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன” என்றார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொதுச்செயலர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியது: “ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தெலங்கானா பகுதி மக்கள் தீவிரமாகப் போராடி வந்தனர். இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டதால், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பேசினோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆலோசனை நடத்தினர். தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக, ஒருங்கிணைந்த ஆந்திரத்தை விரும்பும் மாநில தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை சமரசப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை காங்கிரஸ் காரிய கமிட்டி கேட்டுக் கொண்டது.
ஆந்திரத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு நிலைமை தொடர்பாக, சுஷீல் குமார் ஷிண்டே விளக்கினார். அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு தெலங்கானா தனி மாநிலத்தை அமைக்க காரிய கமிட்டி ஒப்புதல் வழங்கியது என்றார் அஜய் மக்கான். ஆந்திரத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறியது: “தனி தெலங்கானா உருவாக்கப்படும் வேளையில், சீமாந்திரா பகுதி மக்களின் உணர்வுகளுக்கும் உரிய மதிப்பளிக்கப்படும். காரிய கமிட்டியின் முடிவைத் தொடர்ந்து, இனி தனி மாநிலம் அமைப்பதற்கான அலுவல்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கும். ஆந்திரம், தெலங்கானா பகுதிகளில் நிலவும் பொருளாதார, சமூக, வாழ்வியல் சூழ்நிலைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஆராயும். தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான தீர்மானத்தை இனி ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றும்படி அம்மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொள்ளும். அத்தீர்மானம் கிடைக்கப் பெற்றதும் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு புதிய மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கை சட்டப்பூர்வமாக நடைபெறும். ஆந்திரம் இரண்டாகப் பிரிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளை மிகவும் கவனமாக ஆராய்ந்துள்ளோம். அவற்றை சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தெலங்கானாவைப் போல தனி மாநிலம் கேட்டு மேலும் சில மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. தெலங்கானா விவகாரத்தையும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் ஒப்பிடக் கூடாது’ என்றார் திக் விஜய் சிங். தெலங்கானா மாநிலம் 10 மாவட்டங்கள், 17 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக இருக்கும்.
மத்திய அமைச்சரவை சிறப்புக் கூட்டம்: மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர மத்திய அமைச்சரவையின் வழக்கமான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
தெலங்கானா மாநில விவகாரத்தில் நான் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்று ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறினார். இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவு தொடர்பாக எனது கருத்தை மாநில முதல்வர் என்ற முறையில் கட்சித் தலைமையிடமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் தெரிவித்தேன். மக்கள் நலன் கருதி இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் நான் அதிருப்தியுடன் இருப்பதாகவும் எனது பதவியை ராஜிநாமா செய்து விட்டதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது. அதை நம்ப வேண்டாம். ஆந்திரத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நீடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார் கிரண் குமார் ரெட்டி
English Summary: Thanks Yahoo
HYDERABAD: The United Progressive Alliance (UPA) on Tuesday unanimously endorsed a separate Telangana state.
Congress’ communication in-charge of the AICC, Ajay Maken and general secretary Digvijay Singhmade the formal announcement in a press conference. “Congress Working Committee (CWC) presided by Sonia Gandhi passed a resolution and resolved to form a separate state of Telangana, Hyderabad to be joint capital for 10 years for both states: Congress spokesperson Ajay Maken said. He added, “Hyderabad will be the common capital of the separated states for next ten years.” “Formation of Telangana has not been an easy decision, wide consultations have been done. Resolution asks Centre to assist Andhra government to maintain harmony in both states.” Digvijay denied that the formation of the new state was a political decision. “Formation of state will take four to five months. This decision has no connection with elections. One cannot compare Telangana with other issues, this has been a long drawn issue, has been a long standing demand. No new elections, MLAs, MPs to be automatically transferred, IAS and IPS cadre officers to be able to pick states.” “The government will now refer the issue to state assembly of Andhra for an appropriate resolution. Meanwhile, Cabinet will appoint group of ministers to address the issues of people of Andhra and Telangana,” he said. “After 10 years, Seemandhra will have a new capital city in place. Lok Sabha, Rajya Sabha has to pass Telangana bill after which President has to pass bill.” The Congress general secretary added that the grievances of Seema Andhra have been considered in the resolution. “Seema Andhra might be inconvenienced, but they are included in the resolution, all their grievances will be considered while drafting law for the new state,” he said. Telangana will be 29th state in the country. It will be the 12th largest state in the Indian union.
Telangana demand genuine: BJP
The demand for Telangana received a boost as the country’s second biggest political party Bharatiya Janata Party (BJP) backed the formation of the separate state. BJP president Rajnath Singh said the demand for a separate state of Telangana is genuine and should be fulfilled. “The demand of the people of Andhra for a separate Telangana state is genuine and should be fulfilled. The demands of the Joint Political Action Committee, the demands of the BJP there for a separate state of Telangana should be fulfilled,” he informed the media.