cash reward for Rani Rampal
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தொடர்நாயகியாகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஹரியாணா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார்.
ஜெர்மனியின் மான்செங்லாட்பச் நகரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்திய அணி வெண்கலம் வென்றதைத் தொடர்ந்து அதில் இடம்பெற்றிருந்த ராணி ராம்பால் உள்ளிட்ட 6 ஹரியாணா வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்தார்.
இந்த நிலையில் தொடர் நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டதற்காக ராணி ராம்பாலுக்கு மேலும் ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதையும் சேர்த்து மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா வீராங்கனைகள் 6 பேருக்கும் பயிற்சியளித்த பால்தேவ் சிங்குக்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
cash reward for Rani Rampal
Haryana government on Thursday announced a handsome cash reward for Rani Rampal, who was declared ‘Player of the Tournament’ at the recently-concluded Junior Women Hockey World Cup, held at Germany. The announcement was made by chief minister Bhupinder Singh Hooda. He said that a cash reward of Rs 10 lakh would be given to Rani Rampal and also declared a reward of Rs five lakh for Baldev, the coach of women hockey players of Haryana who represented India in the tournament. The chief minister had earlier announced a cash award of Rs five lakh for each of the six women hockey players of Haryana who played in the tournament. He also congratulated the Indian team for winning the country’s first ever bronze medal in the Junior Women Hockey World Cup. While five players hail from Shahabad, the sixth one is from Hissar. They are Navjot, Manjeet Kaur, Navneet Kaur, Rani Rampal, Monika and Poonam Rani.