67 INDEPENDENCE DAY CELEBRATION
67-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மன் மோகன் சிங் செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார்.
காலை 7.30 மணி அளவில் செங்கோட்டைக்கு வந்த பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வரவேற்றார். இதனையடுத்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார். 21 குண்டகள் முழங்க பிரதமர் மூவர்ணக் கொடியேற்றினார். இதனையடுத்து பிரதமர் மன் மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திவருகிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
67 INDEPENDENCE DAY CELEBRATION