news from Twitter regarding Actor vijay in politics is False
சென்னை: விஜய் ட்விட்டரில் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டதென்றும் தெரியவில்லை என்று விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு டுவிட்டர் இணையதளத்தில் கணக்கு வைப்பே இல்லை அவர் கூறியதாக வந்த செய்தி பொய்யான ஒன்று என அவர் தரப்பு செய்திகள் தெருவிக்கின்றன
நடிகர் விஜய் தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்றும் திடீர் எச்சரிக்கை விடுத்ததாக இணையத்தில் வெளிவந்தது . அவர் பெயர் கொண்ட டுவிட்டர் தளத்தில், “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம், எனது ரசிகர்கள் யாரும் அரசியலில் ஈடுபட வேண்டாம். இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும்.
இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன். என் தந்தையோ வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்” என்று டுவிட்டரில் செய்தி வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஆனால் நடிகர் விஜய்க்கு டுவிட்டரில் கணக்கு வைப்பு இல்லை என அவரின் செய்தி தொடர்பாளர் செல்வகுமார் தெரிவித்து உள்ளார். போலியாக யாரோ அவரின் பெயரை வைத்து இதனை செய்து உள்ளனர் என கூறினார்.
actor vijai don’t have account in twitter.