Yasin Bhatkal Caught at last
புதுடெல்லி : பெங்களூர், புனே உட்பட 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன் யாசின் பட்கல் இந்திய , நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் (30) இந்திய , நேபாள எல்லையில் வடக்கு பீகார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உளவுப்படை மற்றும் பீகார் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டான். அவனுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த தகசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக்(23), உத்தரப்பிரதேச மாநிலம் அஜம்காரை சேர்ந்த அசதுல்லா அக்தர் ஜாவீத் அக்தர் (26), வாகஸ் என்கிற அகமது (26) ஆகிய 3 முக்கிய தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். பட்கலிடம் தற்போது பீகார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றம் மூலம் பட்கலை காவலில் எடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐதராபாத், மும்பை குண்டு வெடிப்புகள் உட்பட 40 குண்டு வெடிப்பு வழக்குகளில் யாசின் பட்கலுக்கு தொடர்பு உண்டு. இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாகிதீன் பொறுப்பு ஏற்றிருந்தது. புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். இங்குள்ள கண்காணிப்பு கேமராவில் யாசின் பட்கல் படம் பதிவாகியிருந்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் யாசின் பட்கலுக்கு தொடர்பு உள்ளது. மும்பையில் கடந்த 2011 ஜூலை 13ம் தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். 130க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திலும் பட்கல் உட்பட 4 பேரும் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கடந்த 2008 முதல் யாசின் பட்கலை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். இவரது தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி அரசும், ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசும் அறிவித்திருந்தன. லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவை கடந்த 16ம் தேதி கைது செய்த நிலையில், தற்போது பட்கல், அக்தர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டது பாதுகாப்பு படையின் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. பட்கலிடம் நடக்கும் விசாரணையில் தீவிரவாத சம்பவங்கள் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
English Summary:
Yasin Bhatkal Caught at last
one more link in the chain of domestic terrorism has been broken
With the arrest of Yasin Bhatkal, a co-founder of the Indian Mujahideen, one more link in the chain of domestic terrorism has been broken. Bhatkal, a native of Karnataka, was arrested on Wednesday evening near the border with Nepal in Bihar. The man was wanted in bomb explosion cases in Pune and Hyderabad. What is interesting is that Bhatkal’s arrest, and that of another terrorist leader Abdul Karim Tunda, took place near the border with Nepal. Both arrests came in close succession. This may not spell the end of the bomb terror India has suffered in recent years. But it does say something about the country’s new-found ability to coordinate with intelligence agencies of other countries in catching these dreaded criminals. The challenge now is for prosecuting officers to secure their convictions, if these arrests are to have any meaning.
For More News Click http://www.veedooorealty.com/