ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

G V Prakash has signed his 1st Hollywood movie

G V Prakash has signed his 1st Hollywood movie
G V Prakash has signed his 1st Hollywood movie

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் கால்பதித்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி வந்தார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

G V Prakash has signed his 1st Hollywood movie

G V Prakash has signed his 1st Hollywood movie details to be announced by movie team soon

Advertisement: CHENNAI REAL ESTATE
Residential, commercial and Industrial property for sale in Chennai

Related posts