Malala Yousafzai opens Europe’s biggest library in UK
தாலிபான்களால் தலையில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் மாணவி மலாலா யூசப்சாய் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொது நூலகத்தை திறந்து வைத்துள்ளார். தாலிபான்களால் சுடப்பட்டு தலையில் குண்டடிபட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசப்சாய்(16) சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் செட்டிலாகிவிட்டது. தற்போது மலாலா பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிர்மிங்காம் பகுதியில் 189 மில்லியன் பவுண்ட் செலவில் பொது நூலகம் கட்டப்பட்டது. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நூலகம் இது தான். இந்த நூலகத்தை மலாலா திறந்து வைத்தார். பிர்மிங்காம் தான் இங்கிலாந்தின் இதயத்துடிப்பு. இந்த நகரம் எனக்கு மகிவும் ஸ்பெஷலானது. ஏனென்றால் நான் குண்டடிபட்ட 7 நாட்களுக்கு பிறகு இங்கு தான் உயிர் பிழைத்தேன். இந்த நகரத்திற்கு என்னை பிடித்துள்ளது என்பதை நூலக திறப்பு விழா மூலம் தெரிகிறது. நானும் இந்த நகரை விரும்புகிறேன் என்றார்.
Malala Yousafzai opens Europe’s biggest library in UK
Malala Yousafzai, the Pakistani school girl shot in the head in a failed assassination attempt by the Taliban, today inaugurated Europe’s biggest public library in her newly adopted home of Birmingham. The 16-year-old, airlifted to the city last year for life-saving surgery at the Queen Elizabeth Hospital, now lives with her family in Birmingham. “This city is the beating heart of England. Birmingham is very special for me, because it was here I found myself alive seven days after I was shot,” Malala said at the launch of the new 189-million pound Library of Birmingham. “This event proves this city loves me and I love it too,” she said as she placed her copy of Paulo Coelho’s “The Alchemist” on the shelves among millions of books. Malala also unveiled a commemorative plaque during the ceremony and received her membership card for the archive. The new building contains the Shakespeare Memorial Room, home to a collection of 43,000 books, including copies of the Bard’s First, Second, Third and Fourth Folio editions. “A fusion of the digital and the traditional is absolutely essential to the vision of the library we have,” library director Brian Gambles said in reference to the seven-year project he has led. Malala was attacked by Taliban fighters on a school bus near her former home in the Swat Valley of northwest Pakistan last October. She was targeted for campaigning for girls’ rights to go to school without fear. She survived the attempt on her life and surgeons later inserted a titanium plate and a cochlear hearing implant. Malala has since resumed her studies at Edgbaston High School in Birmingham. Her family continues to face threats from the Tehrik-e-Taliban Pakistan. In July, she was praised for her bravery by UN Secretary-General Ban Ki-moon when she addressed the world body’s youth assembly on her birthday. Malala has since been awarded the Tipperary international peace award and the international children’s peace prize. Earlier this year, she signed a deal worth about USD 3 million to publish her story.