14 Naxals killed in an encounter with police in Odisha
ஒடிசாவில் சத்தீஷ்கர் மாநில எல்லையில் உள்ள மால்கங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு படையினரும், மாவட்ட தன்னார்வ படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்கினார்கள். கடுமையான துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட் ஆவார்.
அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வெடி பொருள் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் மே 25-ந்தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஊர்வலத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் என்றும், அங்கிருந்து தப்பி ஒடிசா மாநிலத்தில் தலைமறைவாக இருந்தனர் என்றும் போலீஸ் டி.ஜி.பி. தேவ்தத்சிங் தெரிவித்தார்.
14 Naxals killed in an encounter with police in Odisha
: At least 14 Naxals, including a woman, were killed by the Special Operations Group (SOG) and District Village Force (DVG) during an operation in the Malkangiri district on Saturday. It is the biggest Naxal casualty in a single operation in the state till date. The police received a tip-off after which it raided the site where the Naxals were camping close to the Chhattisgarh border. However, firing ensued after Naxals opened fire at them. Police suspect the involvement of the Naxals in the attack on the convoy of Congress leaders in Darbha in Chhattisgarh on May 25. The police recovered huge cache of arms and ammunitions and Maoist literature from the Naxals during the operation.