Six innocent people killed in a militant attack at a Remote village called Gendabari located in Assam Megalaya Border
அசாம் – மேகாலய எல்லையில் உள்ள ஓர் கிராமத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை அசாமில் இயங்கும் தடைசெய்யப்பட்ட ‘காரோ தேசிய லிபரேஷன் ஆர்மி’ என்ற தீவிரவாத அமைப்பினர் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த கொலைவெறி தாக்குதல், அசாம் – மேகாலய எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெண்டாபாரி எனும் கிராமத்தில் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டமாக கொண்டாடிகொண்டிருந்த பொதுமக்கள் மீது நவீன ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 6 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொலைசெய்யப்பட்டதாகவும், மேலும் 10 பேர் படுகாயம்முற்றதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த 10 பேரும் கோல்பாரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்த சிலரை, குவாகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு என்ன காரணம் என்று இன்னும் அறியப்படவில்லை என்றும் அந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தார்கள்.
குறிப்பாக, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தானியங்கி ஆயுதங்களை வைத்து இந்த கொலையை செய்ததால், இதை நடத்தியவர்கள் மேகாலயாவில் இயங்கும் ‘காரோ நேஷனல் லிபரேஷன் ஆர்மி இயக்கத்தினர்’ தான் செய்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
Six innocent people killed in a militant attack at a Remote village called Gendabari located in Assam Megalaya Border
At least 7 innocent public were killed and 9 people injured when suspected cadres of the Garo National Liberation Army (GNLA) fired indiscriminately towards people who were celeberating diwali at a remote village in Assam’s Goalpara district Sunday night, the local police said. The terrible incident happened at a remote village called Gendabari, located on the Meghalaya border of Assam state.