Riverside County man skydives on 100th birthday
100 வயதான ஒரு முதியவர் அமெரிக்காவில் தனது 100வது பிறந்த நாளில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாகசம் செய்து சாதனை படைத்துள்ளார்.
தென் கலிபோர்னியாவை சேர்ந்தவர் வெர்னான் மேனார்டு. நேற்று இவர் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கார் வியாபாரியான இவர் இந்த 100 ஆண்டுகளில் உன் வாழ்வில் என்ன செய்ய விரும்பினாய் என இவரது நண்பர்கள் கேட்டதற்கு உற்சாகமாக பதிலளித்த முதிய இளைஞர் வெர்னான், தான் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் ஸ்கை டைவிங் செய்யவேண்டுமென்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதியவர் வெர்னானின் தனது பிறந்த நாளான நேற்று கலிபோர்னியாவில் இருக்கும் பெர்ரிஸ் நகரில் வானத்தில் பறந்த விமானத்தில் 13,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாகசம் புரிந்து சாதனை படைத்தார்.அவருடன், பயிற்சியாளரும் குதித்து உதவி புரிந்தார். இது தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி எனவும், அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 100 வயதான வெர்னான் மேனார்டு இந்த சாகசத்தை செய்யுமுன் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Riverside County man skydives on 100th birthday
When Vernon Maynard’s friends asked him what he wished he had done in his 100 years of life, the Southern California man said he had always wanted to jump from a plane with a parachute. The retired car dealer got the chance to mark his centenarian birthday Monday by doing just that. Jean Walcher of the U.S. Parachute Association says Maynard and his two great nephews made their first skydive along with trained instructors from 13,000 feet southeast of Los Angeles. Skydive Perris manager Dan Brodsky-Chenfeld says Maynard obtained a doctor’s note before making the jump. Maynard’s daughter Linda Hironimus says her father’s friends made arrangements for him to skydive after he said he always wanted to try it. Maynard, who hails from Nebraska, lives in Palm Desert.