Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped
நேற்று பெங்களூரில் ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். பெங்களூர் நோக்கி ஹாசனில் இருந்து நேற்று மாலை ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25 பயணிகள் பயணம் செய்தார்கள்.
மாலை சுமார் 5.15 மணிக்கு யஷ்வந்தபூர் கொரகுண்டேபாளையா சிக்னலில் தும்கூர் சாலையில் பேருந்து வந்தது.
Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped
அப்போது திடீரென்று பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றியது. உடனே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டார். தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல்கொடுத்தனர். தீயணைப்பு படையினர் உடனே 2 வண்டிகளில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, பேருந்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
எனினும், அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் எல்லோரும் உயிர் தப்பினார்கள். யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பேருந்து என்ஜீனில் உண்டான வெப்பம் காரணமாக இந்த தீ விபத்து உண்டாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.