Pan Masala and Gutka banned again in Tamilnadu
சென்னை: 08 மே 2013: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் பான் மசாலா-குட்கா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் மீண்டும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குட்கா-பான் மசாலாவிற்கு மீண்டும் தடைமுந்தைய 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த தடை கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசினுடைய உணவுப் பாதுகாப்பு & தர நிர்ணயம் விதிகளின் படி பான் மசாலா மற்றும் குட்காவுக்கு மீண்டும் தடை விதிப்பதாக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். புகையிலையினால் உண்டாகும் பல்வேறு நோய்களை குறிப்பாக புற்று நோய்களைத் தடுக்கும் பொருட்டு குட்கா, பான் மசாலா போன்ற உட்கொள்ளும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து விநியோகிக்கவும், விற்கவும் தடை விதிக்க பட்டுள்ளது.