Pakistani man chops off girl’s nose for refusing to marry him
பாகிஸ்தானில் தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை வாலிபர் ஒருவர் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான செயல் குறித்து போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
லாகூருக்கு அருகிலுள்ள பகவல்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் பஷீர் அஹமது. அதே கிராமத்தில் விவசாயம் செய்து வரும் நதீம் என்ற வாலிபர் பஷீரின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு பஷீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த நதீம், அவருடைய தந்தை மற்றும் கூட்டாளிகளுடன் பஷீரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகளை சித்ரவதை செய்துள்ளார். பின்பு நதீம் பஷீரின் மகளின் மூக்கை அறுத்துள்ளார்.
இந்த கொடூர செயலை செய்த நதீம், அப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த நீ இனி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ள முடியாது என சத்தமிட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையடுத்து, அந்த வாலிபரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.
Pakistani man chops off girl’s nose for refusing to marry him
A man in Pakistan’s Punjab province allegedly chopped off the nose of a 19-year-old girl who refused to marry him, police said today. Bashir Ahmed, a resident of Bahawalnagar district, 350 km from provincial capital Lahore, told police that Nadeem, a farmer of his village, wanted to marry his daughter. “On my refusal, Nadeem and his father and two other accomplices entered my house yesterday and subjected me, my wife and daughter to severe torture,” a sobbing Bashir said. “They also cut off my daughter’s nose, shouting that she would now remain unmarried for the rest of her life.” A case has been registered under sections of the Pakistan Penal Code against the accused though no arrest has been made so far.