நாட்டிலேயே வரதட்சனை கொடுமையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது

Andhra Pradesh tops list in dowry cases in 2012

Andhra Pradesh tops list in dowry cases in 2012

நாட்டிலேயே வரதட்சணை கொடுமையில் ஆந்திரா மாநிலம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதில் எந்த மாநிலம்தான் முன்னணியில் இருக்கிறது என்று ஒரு தேசியகுற்றப்பதிவு ஆணைய தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. அதாவது கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 511 வரதட்சணை கொடுமை வழக்குகள் ஆந்திராவில் பதிவாகி உள்ளன. ஆயிரத்து 487 வழக்குகளுடன் ஒடிசா மாநிலம் இரண்டாவது இடத்தைபிடித்துள்ளது. மேலும் பெண்கள் மீதான பிற வன்முறை தாக்குதலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பதாயிரத்து 536-வழக்குகளும், தமிழ் நாட்டில் மூன்றாயிரத்து 838 வழக்குகளும் பதிவாகி யுள்ளதாக தேசியகுற்றப்பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது. அருணாசலபிரதேசம் , இமாச்சலபிரதேசம், மணிப்பூர் , மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் வரதட்சணை கொடுமை வழக்குள் பதியப்படாவிட்டாலும் பிறவழக்குகள் அதிகரித்து காணப்படுகின்றன என்கிறது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை. அதேநேரம் உத்திரப்பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் வரதட்சணை கொடுமை தவிர பிற வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Andhra Pradesh tops list in dowry cases in 2012

Andhra Pradesh tops the list in Dowry cases with 2511 cases recorded in 2012 while Odisha was second with 1487 cases recorded under the Dowry Prohibition Act.   Madhya Pradesh was in the top of the list for domestic violence with 9,536 cases followed by Tamil Nadu which recorded 3,838 cases under the Domestic Violence Act 2005 in 2012 according to data from the National Crime Records Bureau (NCRB). Karnataka (1328), Bihar (1353) and Jharkhand (1066) also reported quite a large number of dowry cases while Andhra Pradesh reported 2150 cases of domestic violence for the year 2012.   The NCRB data shows an increasing trend of dowry and domestic violence cases in most of the states barring Arunachal Pradesh, Himachal Pradesh, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Sikkim and Tripura which reported zero cases under the Dowry Prohibition Act, said the Women and Child Development Ministry in its reply to the Lok Sabha today.   Similarly, Uttar Pradesh, Chattisgarh, Pondicherry and Chandigarh reported zero cases of domestic violence.   Over all, a total 9038 cases under the Dowry Prohibition Act were registered in 2012 while 16309 cases under the Domestic Violence Act 2005 were registered in India for the same period.

 

Related posts