“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…
Read MoreCategory: சாதனை சிறகுகள்
உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்…
Antwerpen-Centraal is the world’s most beautiful station. உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… உலகிலேயே பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் மிகவும் அழகான் ரயில் நிலையம் என தனியார் இன்டர்நெட் செய்தி நிறுவனம் அதன் பட்டியலில் வெளியிட்டுள்ளது… உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… English summary : Antwerpen-Centraal is the world’s most beautiful station. A famous news website ‘Mashable’ has chosen Antwerp’s Central Station ‘Antwerpen-Centraal’ as the world’s most attractive rail station. Antwerpen-Centraal beats, among others, London’s Saint Pancras Railway Station and New York’s Old City Hall Station. Another Belgian station,…
Read Moreஇந்திய வம்சாவளி மாணவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவனாக தேர்வு..
An Indian-origin student Asanish Kalyanasundaram hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam. இங்கிலாந்து – லண்டன்: இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அசானிஷ் கல்யாணசுந்தரம் (வயது 18) என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசானிஷ் கல்யாணசுந்தரம் எனும் இளைஞர், இங்கிலாந்து நாட்டில் இருக்கும் லங்காஷயர் பகுதியில் உள்ள பர்ன்லீ எனும் பகுதியல் தனது அன்னை திருமதி.சுஜாதாவுடன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள “புனித ஜோசப் பார்க் ஹில்” எனும் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் கடந்த பள்ளி இறுதித் தேர்வாகிய ‘ஏ’ லெவல் தேர்வில் கணக்கு, உயிரியல், நெருக்கடியான சிந்தனை, வேதியல் மற்றும் இயற்பியல், ஆகிய 5 பாடங்களிலும் 100% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.…
Read Moreதமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.
ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ, அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை. எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது. முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி…
Read Moreசன் கிளாஸை பயன்படுத்தி ஐபோன் சார்ஜ் அமெரிக்க வாழ் இந்தியர் சாதனை
Indian designer Sayalee Kaluskar : Ray-Ban Shama Shades with solar panels would charge your iPhone இந்த விஞ்ஞான உலக மாற்றத்தில் ஒன்றாக மாற்று மின்சாரத்தின் தேவை பற்றி விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. பலரும் பல்வேறு வித்தியாசமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள். ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும் போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகல் பொழுதில் படும் சூரியக்கதிர்கள் மூலம் கூலிங்கிளாசில் விசேசமாக பொருத்தப்பட்டுள்ள சோலார் பிரேமில் பட்டு ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சார்ஜ் செய்யும் முறையை Sayalee Kaluskar என்ர அமெரிக்க வாழ…
Read Moreமூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை
Baby born after brain dead mother kept alive for three months மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை : ஹங்கேரியில் ஒரு மூளைச்சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை நவீன மருத்துவ முன்னேற்றத்தால் சுமார் 92 நாட்கள் வயிற்றிலே வளர்த்து பிரசவிக்கச் செய்து ஹங்கேரி நாட்டு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பொதுவாக விபத்து மற்றும் சில உடல் நலக் கோளாறுகளினால் மூளைச்சாவு அடைபவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளைக் கொண்டு பாதிக்கப் பட்ட 7 பேரின் வாழ்க்கையை ஒளியூட்டலாம் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திடீர் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தகுந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளித்து…
Read Moreஉடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பிரேஸ்லெட்
A Thermoelectric Bracelet To Maintain a Comfortable Body Temperature இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று…
Read Moreகிரிக்கேட் வரலாற்று சாதனையாளர் சச்சின் ஓய்வு பெறுகிறார்
Sachin Tendulkar retires from Test cricket after living Cricket dream இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாகவும், கடைசி போட்டிகள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் சச்சின். இதேபோல் அவரது முதல் ஒருநாள் போட்டியும் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக டிசம்பர் 18-ம் தேதி தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தார். உலக வேகப்பந்து மற்றும் சுழர்ப் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக…
Read More19 வயது வாலிபர் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி சாதனை
19 year old boy driving a solo flight alone around the world. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேயான் கேம்பல் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி வர திட்டமிட்டார். இவருக்கு வயது 19. இவர் ஒரே என்ஜீன் உள்ள குட்டி விமானத்தைதில் தனியே ஓட்டி உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். ஜூன் 30ம் தேதி இலகு-ரக விமானத்தில் ஆஸ்திரேலியா, நியூ வேல்ஸ் பகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். விமானத்தில் 70 நாட்கள் தொடர்ந்து பயணித்து ரேயான் உலகின் அனேக இடங்களையும் சுற்றி தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். வுல்லான்காங் நகரில் இருந்து தொடங்கிய விமான பயணத்தை 14 நாடுகளுக்கு 200 மணி நேரம் விமானத்தில் சுற்றி 70 நாட்களில் 44,448 கி.மீட்டர் தூரம் பயணித்து இருக்கிறார். இதன் மூலம் விமானத்தை தனியாக இயக்கி உலகத்தை சுற்றிய மிகச் சிறிய வயது வாலிபர் என்ற சாதனையை செய்து இதற்கு முன் படைத்த சாதனையான அமெரிக்காவை சேர்ந்த ஜேக் வீகன்ட் வயது 21 செய்த சாதனையை 19 வயதிலேயே செய்து முறியடித்தார். 19…
Read Moreஇந்திய ராணுவசெயற்கைக் கோள் GSAT-7 விண்ணில் செலுத்தப்பட்டது
GSAT-7 : India to launch GSAT-7 from Kourou : Indias-first-defence-satellite-GSAT-7-launched-successfully ஜிசாட் 7 செயற்க்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. முழுக்க முழுக்க ராணுவத்திற்காக பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜி சாட்-7 செயற்கைக் கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, புவியை ஆராய்வதற்காகவும், தொலை தொடர்பிற்காகவும், தொடர்ந்து பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஜி சாட்-7 என்ற செயற்கைக் கோளானது இன்று அதிகாலை 2 மணியளவில் பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 என்ற ஏவூர்தி மூலம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளானது, 7 ஆண்டுகள் வரை விண்ணில் இருந்து பூமியை கண்காணிப்பதோடு, ராணுவ செயல்பாடுகளுக்காகவும் பயன்படவுள்ளது. குறிப்பாக கடற்படைக்கு பல்வேறு வகையில்…
Read More