Scientists grow mini human brains from stem cells முதன் முறையாக ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர் கிருமிகளை வளர்க்க பெட்ரி தட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தட்டுகளில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி மனித மூளையின் ஒத்த பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்தது போன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது. இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன. இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன் நோபிளிச் தெரிவித்துள்ளார்.…
Read MoreCategory: சாதனை சிறகுகள்
டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்ஸி: கூகுள் நிறுவனம்
robo taxi service by Google considering turning self-driving cars (27-8-13)டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்ஸி கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது. தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் மற்றும் கணினி தொழில்நுட்பங்களை கூகுளே வழங்கவுள்ளது. இந்த கார்கள் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும். இதற்கான பணிகள் முடிவடைந்து,இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து…
Read Moreஆப்பிளின் அடுத்த படைப்பு கை கடிகாரம் விரைவில்
apple new iwatch coming soon ஆப்பிள் நிறுவனமானது புதிய iWatch உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது . தற்போது குறித்த iWatch தொடர்பான வடிவமைப்பு தொடர்பான தகவல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2014ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனம் ஆப்பிளின் முன்னைய ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. மேலும் இதனை செல்போண்ணுக்கு இணையாக பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே ஆப்பிளுக்கு போட்டியாக விளங்கும் சாம்சுங் நிறுவனம் இவ்வருட இறுதியில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ இணைப்பு apple new iwatch coming soon We know that Apple is working on their new Apple iWatch, although we have no idea what the device will look like. The following…
Read Moreகடலுக்கடியில் வனுவாத்தூ தபால் நிலையம்
Vanuatu Postal Station Underwater நாட்டின் தொலைத் தொடர்புப் பணியில் தபால் சேவைக்கென முக்கியப் பங்கு இன்றைக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட சேவையை அளிக்கும் தபால் நிலையங்கள் பொதுவாக மக்கள் எளிதாக அணுகும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் இந்தத் தபால் நிலையம் முற்றிலும் வித்தியாசமானது. வனுவாத்தூ தபால் நிலையம் நிலத்திலிருந்து 3 மீட்டர் கடலுக்கடியில் செயல்பட்டு வருகிறது.ஆஸ்திரேலியா அருகே சுமார் 100 தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. வனுவா என்றால் நிலம் என்று பொருள். இதனால் இந்த தீவு வனுவாத்தூ என அழைக்கப்படுகிறது. ஹைடுஅவே தீவின் அருகே கடலுக்கு அடியில் இருக்கும் இந்த தபால் நிலையத்தை காண வரும் பார்வையாளர்கள் தண்ணீருக்குள்ளே அணியப்படும் முகமூடி உள்ளிட்ட கவசங்களையெல்லாம் அணிந்துக்கொண்டு செல்கின்றனர். வனுவாத்தூவில் கிடைக்கும் சிறப்பு வாட்டர் ப்ரூப் தபால் அட்டைகளை இதுவரை ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளனர். இங்கிருந்து அனுப்பபடும்…
Read Moreபெரிய புத்தகம் சிறிய உருவம் சாதனை படைத்த ராஜஸ்தான் பெண்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், “மெகா’ சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30 அடி, அகலம் 24 அடி, எடை 2,000 கிலோ. முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய இந்தப் புத்தகத்தை 25 அங்குலம் உயரமுள்ள ஜோதி ஆம்கே வெளியிட்டார். “இந்த மெகா சைஸ் புத்தகத்தை நான் வெளியிட்டுள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்தப் புத்தகம் நன்றாக உள்ளது. ஜெய்ப்பூர் மக்கள் விருப்பத்தக்கவர்கள்’ என ஜோதி ஆம்கே தெரிவித்தார். இந்தப் புத்தகம் 1500 கிலோ இரும்பு, 100 லிட்டர் வண்ணச்சாயம் மற்றும் 400 கிலோ ஆளி விதை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத் மற்றும் நாசிக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட 10 பேர் 4 நாள்களில் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.…
Read Moreவிமானத்தை விட வேகமாக செல்லும் வாகனம் விரைவில் அமெரிக்க அறிமுகம்
போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார். மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃபிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி…
Read Moreபோர்க்கப்பல் விக்ராந்த் இந்திய கடற்படைத்தளத்தில்
INS Vikrant, India 1st indigenous aircraft carrier launched இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் என்ற போர்க் கப்பல், இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் முறைப்படி இணைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. முதன் முதலாக இந்திய நிபுணர்களால் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை இயக்குனரகம் வடிவமைத்த இந்த போர்க்கப்பலை கட்டும் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கியது. 260 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பலின் எடை 37 ஆயிரத்து 500 டன் ஆகும். இந்த கப்பலின் 55 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கப்பலின் வெளிப்புற கட்டுமானம் மற்றும்…
Read Moreகடலில் ஐ .என்.எஸ் விக்ராந்த் போர்கப்பல்
India launched its first aircraft carrier INS Vikrant உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாராகி வரும் விக்ராந்த் போர்கப்பல் கடலில் இறக்கப்பட்டது . முதல் கட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து விக்ராந்த் போர்கப்பல் கொச்சியில் கடலில் இறக்கப்பட்டது . இந்த 37,500 டன் எடை கொண்ட போர்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, அவரது மனைவி எலிஸபெத்துடன் கலந்து கொண்டு, முறைப்படி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஐ .என்.எஸ் .விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் 2016 ஆம் ஆண்டு நடைபெறுகிறது . இந்த விமானந்தாங்கி போர்கப்பல் 2018 ஆம் ஆண்டில் இந்திய கடற் படையில் சேர்க்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார் . Indias first aircraft career-INS Vikrant, placing India in the fifth rank, after US, Russia, Britain and France,…
Read Moreகாலை இழந்த அருனிமா எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை
arunima sinha, first amputee to climb Mount Everest தன்னம்பிக்கையின் சிகரமாய் விளங்கிய அருனிமா சிங்கா தன் ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி தேசிய அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற அருணிமா சின்கா(வயது 25). உத்திர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி பணம், நகையைப் பறித்தனர். இதைப் பார்த்த அருணிமா கொள்ளையர்களை தைரியத்துடன் விரட்ட தொடங்கினார். எனினும் கொள்ளையர்கள் அதிகம் பேர் இருந்த காரணத்தினால் அவரால் விரட்ட முடியவில்லை. இந்நிலையில் அருணிமாவை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள் , ஓடும் ரயிலில் இருந்து வெளியே அருனிமாவை தூக்கி வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் வலது காலை…
Read Moreமனிதனின் கண்ணில் புதிய கண்டு புடிப்பு: நாட்டிங்ஹாம் பல்கலைகழகம்
மனித உடலிலே இதுவரை அறியப்படாதிருந்த பகுதி ஒன்றினை நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். Harminder Dua என்று பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியானது மனிதக் கண்ணிலேயே காணப்படுகின்றது. அதாவது கண்களில் காணப்படும் அடுக்குகளில் ஒன்றாக அமைந்துள்ள இப்புதிய பகுதி கருவிழியில் முன்னர் அறியப்பட்ட 5 அடுக்குகளுடன் சேர்த்து ஆறாவது அடுக்காக (Layer) கருதப்படுகின்றது. இப்புதிய கண்டுபிடிப்பானது கருவிழியில் கோளாறு உள்ளவர்கள் மற்றும் ஏனைய பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவதை எதிர்காலத்தில் இலகுவாக்கும் என்று குறித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More