டெல்லி: கொரோன பரவலைத் தடுக்க , விசாரணைக்கு உட்பட்ட கைதிகளை நீதிமன்றங்களுக்கு முன் ஆஜர்படுத்தக்கூடாது என்றும், வீடியோ கான்பரன்சிங்யை பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. “வெளியில் பரவுவதற்கான சாத்தியத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றங்களுக்கு முன்பாக அனைத்து கைதிகளை நேரில் ஆஜராவதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மேலும் வீடியோ கான்பரன்சிங்யை பின்பற்றப்பட வேண்டும்” என்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
Read MoreCategory: செய்தி சிறகுகள்
முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவலை ஜம்மு காஷ்மீர் அரசு ரத்து செய்கிறது
புதுடெல்லி: முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ஜம்மு காஷ்மீர் அரசு வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.தேசிய மாநாட்டுத் தலைவர் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி செப்டம்பர் 15, 2019 அன்று மூன்று மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார்.டிசம்பர் 13 ம் தேதி, தடுப்புக்காவல் உத்தரவு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் .அந்த உத்தரவில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ரத்து செய்தது.
Read Moreஉயர்நீதிமன்ற நீதிபதிகளின் கூடுதல் இடமாற்றங்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
டெல்லி :உச்சநீதிமன்ற கொலீஜியம் 2020 மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி திரு அலோக் சிங்கை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.என். சத்யநாராயணாவை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு.பரிந்துரைத்துள்ளது. பிப்ரவரி மாதம் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் மோர் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி ரவி விஜயகுமார் மாலிமத்தை உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்திற்கும் மாற்ற பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
Read Moreமோசடி வழக்கில் முன்னால் அதிமுக எம்பி கே.என் ராமச்சந்திரன் குற்றவாளி – சிறப்பு நீதிமன்றம்
சென்னை :அதிமுகவின் ஸ்ரீபெரும்புதுார் எம்.பியாக கடந்த 2014-19 வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியின் தலைவராக ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார். கல்லுாரியை விரிவாக்கம் செய்ய ராமச்சந்திரன் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளராக இருந்த தியாகராஜன் மூலம் விண்ணப்பத்தை விதிகளுக்குட்பட்டு, முறையாக கையாளாமல் 20 கோடி கடன் பெற்றுள்ளார் .இதற்கு லஞ்சமாக தியாகராஜன் குடும்பம் அமெரிக்கா செல்வதற்குமான விமான டிக்கெட் தொகை 2.69 லட்சத்தை அறக்கட்டளையிலிருந்து ராமச்சந்திரன் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.வங்கி மேலாளர் மற்றும் ராமச்சந்திரன் உட்பட நான்கு பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது .வழக்கை…
Read Moreதிருவேற்காடு கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வாகனத்திற்கு நுழைவு கட்டணத்தை ஒப்பந்தம் அடிப்படையில் வசூலித்து வந்தனர்.மேலும் 3 ஆண்டுகள் வசூலிப்பதற்கான அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி13 ம் தேதி திருவேற்காடு நகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்தார்.நுழைவு கட்டணம் வசூலிக்க நகராட்சி ஆணையர் பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்து, நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெடரேஷன் ஆஃப் கன்சூயூமர் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பின் பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு நுழைவுக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தனர். இதற்கு பதில் அளிக்க நகராட்சி நிர்வாகம் ,குடிநீர் வழங்கல் துறை…
Read Moreபாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி :பாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷாஜகான்பூர் சட்ட மாணவர் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை .மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை சேதப்படுத்தவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றம் போதுமான நிபந்தனைகளை விதித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Read Moreஇளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான வழக்கை விரைவில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் இசை கூடம் உள்ளது .அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை வற்புறுத்தியது.இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி நகர சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரங்களில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க உத்தரவிட்டது.
Read Moreஅரசியல்வாதிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு
டெல்லி: பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா, கபில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெறுக்கத்தக்க உரைகள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை டெல்லி காவல்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டது. டெல்லி காவல்துறையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நீதிபதிகள் எஸ் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை நிறைவேற்றியது.
Read Moreஉ.பி. காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை – அலகாபாத் உயர்நீதிமன்றம்
அலகாபாத்:அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் “மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திய காவலர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை தேவையில்லாமல் தடுத்து நிறுத்திய காவல்துறையினரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு திங்களன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உ.பி. அரசின் காவல்துறை டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி சமித் கோபால் ஆகியோர் அடங்கிய பிரிவு அமைவு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Read Moreஐந்தரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை -சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம்
பிலாஸ்பூர்:ஐந்தரை வயது சிறுமியை 25 மே 2015 அன்று பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக ராம் சோனா குற்றம் சாட்டப்பட்டார் . சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கவுதம் சவுர்தியா ஆகியோர் அடங்கிய அமர்வு சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனையை உறுதி செய்தனர்.
Read More