சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Read More

ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த ஏரி,குளங்களை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: சென்னையை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த மனுவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Read More

தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்த பாஜக

சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார்.அவரது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தெலங்கானா உட்பட கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பாஜக.

Read More

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் மீது பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஐ.ஜி. முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்தார்.பெண் எஸ்.பி. தரப்பில் கேரளாவுக்கு மாற்ற தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றி 6 மாதத்தில் அறிக்கை தர அந்த மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. தெலங்கானா மாநில டிஜிபி-க்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி, மூத்த பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி…

Read More

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Chennai Highcourt

சென்னை: கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.இவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் கணவன் பராமரிப்பில் உள்ளனர்.மகளுக்கும், தந்தைக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார்.முன்னாள் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி முன்னாள் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் தாய் முன்னாள் கணவர் மீது பொய் புகார் அளித்தது தெரியவந்தது. குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என கூறி, பொய் புகார் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read More

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு- சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:.கடந்த ஜனவரி மாதம் சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பிரிவு மாணவ மாணவிகள் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றனர்.சுற்றுலா சென்று திரும்பிய மாணவிகள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக முதல்வருக்கு மாணவிகள் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக சாமுவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். மனுவை தள்ளுபடி செய்ததோடு, கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

Read More

ஊதிய உயர்வு கோரிய துப்புரவுப் பணியாளர்கள் வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்று சசிகலா உள்ளிட்ட 30 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு துப்புரவுப் பணியாளர்களாக நிரந்தரம் செய்யப்பட்டோம். எங்களுக்கு மாதம் ரூபாய் 5730 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம் 21500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.எங்களுக்கும் அதே ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் 14ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Read More

தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அடையாறில் அமைந்து உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளி செயின்ட் பேட்ரிக் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.கடந்த 2005-ம் ஆண்டு பள்ளிக்கு அருகாமையில் இருந்த அரசுக்கு சொந்தமான 5.25 ஏக்கர் நிலத்தை சிவில் நீதிமன்றம் மூலம் நிலத்திற்கான உரிமையை பெற்றது.இந்த வழக்கில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிலத்திற்கான உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது.கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மறுத்துவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை சிவில் நீதிமன்றம் முழுமையாக விசாரணை…

Read More

அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் குடியுரிமை சான்றிதழ் வழங்காததால் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியும் மருத்துவ கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கல்லூரியில் மாணவி அபிராமியை சேர்க்க உத்தரவிட்டார்.12 வாரங்களில் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சமர்ப்பிக்க தவறினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் மாணவி அபிராமி 10 லட்சம் ரூபாயை செலுத்தி மற்ற சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Read More

ஆணவக்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஆணவக்கொலைகளை தடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.ஆணவக்கொலை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆணவக்கொலை புகார் வந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் தீர்ப்பு ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read More