Twitter account for tamil cini actor jeeva நடிகர் ஜீவா தற்பொழுது நடித்து வரும் படம் ‘என்றென்றும் புன்னகை’. இதில் அவருடன் திரிஷா சந்தானம் மற்றும் வினை நடித்து வருகின்றனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை சன் குழுமம் பெற்றுவிட்டதாகவும் அதனை நவம்பர் 29ஆம் தேதி சன் பிக்சர் வெளியிட போவதாகவும் ஜீவாவின் பெயர் கொண்ட டுவிட்டர் இணைய தளத்தில் திடீர் என செய்தி பரவியதால் திரை உலகில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. அந்த இணைய தளம் ஜீவாவின்னுடையது இல்லை என அவர் தரப்பு செய்திகள் வெளி வர இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஏற்க்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியும் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் பெற்று உள்ளதால் இச்செய்தியை கண்ட அனைவரும் பரபரப்பு ஆகினர் பின்னர் ஜீவாவின் தரப்பில் இருந்து அது பொய்யான இணைய முகவரி…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் by Lingesh
மூளையை சுத்தப்படுத்தும் ஆழ்ந்த தூக்கம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
A good nights sleep scrubs your brain clean, researchers find மனிதர்கள் நீண்ட நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு மிகவும் நலன் தரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்த்தில் விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு தலைமை தங்கி நடத்தப்பட்ட ஆய்வில், அவருடைய குழுவினர் மனிதர்கள் தூங்குவது ஏன்? என்பது குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டார்கள். அதில், நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி அடிக்கப்படுகிறது. அப்போது மூளைக்கு வெளிப்புறம் படிந்திருக்கும் மூலக்கூறுகளின் சிதைந்த பொருட்களும், நச்சு புரோன்டீன்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கு விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு குழுவினர் சுண்டெலிகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. A good…
Read Moreமனித மூளைக்கு நிகரான கணினி: IBM நிறுவனம் சாதனை
The computer powered by electronic BLOOD: IBM unveils brain-inspired computer that runs on electrolyte-rich liquid மனித மூளையை போல் மின்னணு இரத்ததினால் வேலை செய்யும் கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை செய்துள்ளது. மூளை தான் மனிதனுடைய உடல் உறுப்புகளில் மிக மிக முக்கியம். இது மனிதன் இயங்க மிகவும் இன்றியமையாததாகும். மூளையை போலவே மின்னணு இரத்ததினால் இயங்கக்கூடிய கணினி ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது. அது என்னவென்றால், மனிதனுடைய மூளையை போல் கம்ப்யூட்டர் ஒருவகையான திரவத்தினால் சக்தியை பெற்று அதே திரவத்தினால் அதனுடைய வெப்பத்தை நீக்கி குளுமை ஏற்படுத்தி கொள்ளும். ஒரு குருதிச் சுற்றோட்டத்தொகுதி போல், ஒரு வித மின்னணு ரத்தத்தினை கம்ப்யூட்டர் உள் வழியாக செலுத்தி ஓடச்…
Read Moreஒரு ஆண்டில் 10 தலைவர்களை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன்
planned to assassinate 10 hindu leaders a year : Police Bakrudeen ஆண்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் சுமார் 10 பேரை கொன்று குவிக்க சதி திட்டம் தீட்டினோம். ஆனால் 5 பேரை மட்டுமே கொல்ல முடிந்தது என்று பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். வெள்ளையப்பன், மதுரை சுரேஷ், ஆடிட்டர் ரமேஷ் உள்பட இந்து தலைவர்கள் படுகொலை தொடர்பாக தேடப்பட்ட போலீஸ் பக்ருதீன் சென்னையில் பிடிபட்டான். ஆந்திர மாநிலம் உள்ள புத்தூரில் தலைமறைவாக இருந்த அவனது கூட்டாளி பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை மிக நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தார்கள். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்த பன்னா இஸ்மாயில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது…
Read Moreகிரிக்கேட் வரலாற்று சாதனையாளர் சச்சின் ஓய்வு பெறுகிறார்
Sachin Tendulkar retires from Test cricket after living Cricket dream இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாகவும், கடைசி போட்டிகள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் சச்சின். இதேபோல் அவரது முதல் ஒருநாள் போட்டியும் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக டிசம்பர் 18-ம் தேதி தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தார். உலக வேகப்பந்து மற்றும் சுழர்ப் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக…
Read Moreவாழ்க்கையிலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஹீரோ: ஹ்ரித்திக்ரோஷன்
Rajinikanth is a Real hero in his life: Hrithick Roshan Says நிஜ வாழ்க்கையிலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஹீரோ என்கிறார் பாலிவுட் ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். பாலிவுட் முன்னணி நாயகர்கள் அத்தனை பேரும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் புகழ் பாடுவது இப்போது வழக்கம் ஆகிவிட்டது. குறிப்பாக அவர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது ரஜினிக்கு செலுத்தும் மரியாதையே தனி. இப்போது அந்தப் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளார். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார். 1986ல் வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஹ்ரித்திக். இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும், ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்துள்ளேன். ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர்…
Read Moreஏழையாக இருந்தால் கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம்: புதிய ஆய்வு
human can live for more than 90 years, if they are poor where it is believed that only rich people can live long healthy life. ஏழையாக இருந்தால் போதுமானது, கண்டிப்பாக 90 வயது வரை ஆரோக்கியமாக வாழமுடியும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 90 வயது வரை வாழ ஏழையாக இருந்தால் போதும்: புதிய ஆய்வு 90 வயது வரை வாழ பணம் மற்றும் வசதி இருந்தால் போதும் என பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் பணக்கார நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாழ் நாள் நீளும் என நம்பாப்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதமாக புதிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்தின் லேடன் என்ற பகுதியில் முதுமை மற்றும் உயிர்…
Read More2020ம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும்
சாக்லேட் பிரியர்களுக்கு தலையில் இடியை இறக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால், உலகில் சாக்லேட்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சாக்லேட் துறை நிபுணர்களின் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது. அதில் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதியோடு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். சாக்லேட் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருளான கொக்கோவின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது. கொக்கோ விளைச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொக்கோ பயன்பாடு குறைவாகத் தான் இருக்கும் என்றும், ஆசியாவில் தான் தேவை பல மடங்கு அதிகரிக்கும்…
Read Moreநடிகர் எஸ்.வி.சேகர் மோடியின் ஆசியுடன் பா.ஜ.க வில் சேர்ந்தார்
Actor SV Sekar joined in BJP after meeting Narendra modi நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் நல்ல நேரம் பார்த்து இன்று பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்பு காங்கிரஸில் இணைந்து விலகினார். இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார். சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர் சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று செவ்வாய் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார். இதுகுறித்து எஸ்வி சேகர் கூறுகையில், நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில…
Read Moreதலைநகர் எ.டி.எம் மையங்களில் காமலீலை
டெல்லி வாழ் காதல் ஜோடிகள் தற்போது ஏ.டி.எம் மையங்களை காதல் வளர்க்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த காணொளி இணையதளத்தில் வெளியானது. சிசிடிவி காணொளியை கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனைத் தொடந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பதை பிரபல தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியது. தற்போது அந்தவகையில் சில ஜோடிகள் காதல் வளர்க்கும் களமாக ஏ.டி.எம். மையங்களை மையம் கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஏ.டி.எம் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகளை காவல் துறையினரே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். யாரும் நம்மைப் பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்ற நோக்கத்தில் எல்லை மீறும்…
Read More