இன்று கூகுள் தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது

Google’s 16th Birthday: The Internet giant wishes itself with a cute doodle இணைய உலகின் மிகச்சிறந்த தேடு பொறியாக விளங்கும் கூகுள் இன்று தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்காக தனது லோகோவில் “O” எழுத்தும் “L” எழுத்தும் வளர்ந்திருப்பதுபோல் சிம்பிளாக லோகோவை வடிவமைத்துள்ளது. லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட கூகுள் சேவை உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் “தீமைத் தன்மை இல்லாதிருத்தல்” என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. அதனுடன் 30,000 மேற்பட்ட ஊழியர்களை நாடு முழுவதும் வளர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த 16 வருடங்களில் கூகுள் அறிமுகபடுத்தியவை எவை, மற்றும் கூகுள் தொடர்பானவற்றை எமது சில முன்னைய பதிவுகளில் காணலாம். கூகிளிற்கு 15 வயது :…

Read More

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் 4 ஆண்டுகள் சிறை

Jayalalithaa Sentenced to Four Years in Jail in Corruption Case by Bangalore Court வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம்…

Read More

நவம்பருக்குள் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயரும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

Ebola cases to triple by November unless efforts raised ‘எபோலா வைரஸ் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாவிட்டால், இன்னும் இரண்டு மாதங்களில், இந்நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 20 ஆயிரமாக உயர்ந்து விடும்; நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, அந்த அமைப்பு தெரிவித்துஉள்ளதாவது:மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில், எபோலா நோய் தாக்குதல் உள்ளது. இது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு, 2,800 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், 5,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நோயை கட்டுப்படுத்த இன்னும் ஸ்திரமான நடவடிக்கைகள் இல்லாததால், வரும் இரண்டொரு மாதங்களில், இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டக் கூடும். நோய் தாக்கியவர்களில், 71 சதவீதம் பேர் பலியாகியுள்ளதால், இறப்பு அதிகரிக்க அதிக…

Read More

டெல்லி உயிரியல் பூங்காவில் அத்துமீறி நுழைந்த வாலிபரைக் கொன்றது புலி

White Tiger Attacks And Kills Man Who Fell Into Its Enclosure at Delhi Zoo டெல்லி உயிரியல் பூங்காவில் இன்று நடந்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர வைத்து விட்டது. அங்குள்ள வெள்ளைப் புலி இருந்த பகுதியில் புலியைப் பார்த்து தனது நண்பர்களுடன் கூச்சல் போட்டு சத்தம் போட்டுள்ளார் ஒரு பிளஸ்டூ மாணவர். அப்போது தவறி உள்ளே விழுந்து விட்டார். அவரை அந்தப் புலி பயங்கர கோபத்துடன் கடித்துக் குதறிக் கொன்ற பரிதாபம் அனைவரையும் உறைய வைத்து விட்டது. டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒரு வெள்ளைப் புலியும் உள்ளது. இந்நிலையில், இன்று ஹிமான்சு என்ற 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் இந்த உயிரியல் பூங்காவைப் பார்வையிட சென்றுள்ளார். மதியம் சுமார்…

Read More

தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக மருத்துவ சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சித் தகவல்

30 thousand fake doctors indian medical association balasubramanian தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். கவுன்சில் கூட்டம் இந்திய மருத்துவ சங்கத்தின் 280-வது கவுன்சில் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் (தேர்வு) சுரேந்திரன், செயலாளர் ராஜா, பொருளாளர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய மருத்துவ சங்கம் கடந்த 1928-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்திய அளவில் தமிழகம் அதிக உறுப்பினர்களை கொண்ட கிளையில் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் இச்சங்கத்தில் 30 ஆயிரம் டாக்டர்கள்…

Read More

அமெரிக்காவில் காதலியை கொன்று மூளை, இதயத்தை சாப்பிட்ட கோடூர காதலன்

Psycho cannibal killer stabs lover to death then eats her brain, heart and lungs அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த ஜெப்பர் ஜோன்வில்லி பகுதியை சேர்ந்தவர். டாம்மி ஜோ பிளாண்டன் (வயது 46). சம்பவத்தன்று பிளாண்டன் போலீசாரை அழைத்து உள்ளார். உடனடியாக போலீசார் அவரது வீட்டுக்கு சென்று உள்ளனர். பிளாண்டன தனது முன்னாள் காதலன் தனது வீட்டை உடைத்து சேதப்படுத்தியதாக புகார் கூறிஉள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரது காதலர் ஜோசப் ஒபர்கென்சலே (வயது33) எனபவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் பிளாண்டன் போலீசாருக்கு அழைப்பு விடுத்தார். இந்த முறை போலீசார் சென்று பார்த்தபோது பிளாண்டன் வீட்டில் இல்லை. சிறிது நேர தேடுதலுக்கு பிறகு பிளாண்டனின் உடல் ரத்த வெள்ளத்தில் குளியல் தொட்டியில் கிடந்து உள்ளது. உடனடியாக போலீசார் பிளாண்டனின் உடலை…

Read More

பெங்களூர் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

350 Bangalore kids fall sick after lizard spotted in mid-day meal பெங்களூரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெங்களூரு டி.ஜே.ஹள்ளி பகுதியில் உள்ள உருது ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் அங்குள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மதிய உணவுக்காகத் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் காதர் கூறியதாவது: மாணவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.…

Read More

மதுரையில் பட்டப்பகலில் 3 பேர் வெட்டிக் கொலை

Gang hacks three youths to death in broad daylight மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர், மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் குண்டுமலை. இவரது மகன்கள் கருப்புராஜ் (வயது 23), பாம்பு நாகராஜ் (18). இவர்கள் இருவரும் கோவையில் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். இவர்களது வீட்டிற்கு நாகராஜின் நண்பர் கார்த்திக் (22) என்பவரும் வந்திருந்தார். நேற்று மதியம் 3 பேரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் 3 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொலையாளிகள் நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தை சேர்ந்த…

Read More

நியூயார்க் நகர நிர்வாகம் இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்துள்ளது

New York city to pay $225,000 to Indian girl to settle lawsuit தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக, இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் கொடுத்தது நியூயார்க் நகர நிர்வாகம். இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த கிருத்திகா தன்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர்கள் கோரியிருந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணைகள்…

Read More

பாகிஸ்தானில் தாமதமாக வந்த அமைச்சரை விமானத்திலிருந்து இறக்கிய பயணிகள்

Pak politicians ejected out of plane for causing delay பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவரும், எம்.பி ஒருவரும் விமானத்திற்கு தாமதமாக வந்ததால் பயணிகளால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வக்வானி ஆகியோர் விமானம் ஏறுவதற்கு காலதாமதமாக வந்தனர். இதனால் விமானத்தில் ஏறிய இருவரும் பயணிகளால் இறக்கி விடப்பட்டனர். பாகிஸ்தான் விமானம்: கராச்சி விமான நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. 2 மணி நேரம் காத்திருப்பு: அதில் சுமார் 250 பயணிகள் ஏறி அமர்ந்த நிலையில், அதில் பயணம் செய்யும் முன்னாள் அமைச்சர்…

Read More