Total lunar eclipse to be partially visible in India இயற்கை அதிசயங்களில் ஒன்றான சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. இவ்வாண்டில் நிகழவிருக்கும் இரண்டாவது சந்திர கிரகணம் இதுவாகும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் பொழுது, பூமியின் நிழல், சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தால், சந்திரன் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் என்று மும்பை நேரு கோளரங்கம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாலை 5.54 நிமிடங்களுக்கு நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் 11 நிமிடங்கள் மட்டுமே தென்படும். Total lunar eclipse to be partially visible in India A total lunar eclipse, the second and last one of this year,…
Read MoreCategory: அறிவியல்
உலக ஓசோன் பாதுகாப்பு நாள்
world ozone day சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம். அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஓசோன் படலம் சிதைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் 1970களில் விஞ்ஞானிகள் குரல் கொடுத்தனர். ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள் (Chloro fluro carbons – CFC), மிதைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருள்கள் ஓசோன் படலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. கனடா நாட்டிலுள்ள மாண்ட்ரீல் நகரில் 1987-ம் ஆண்டு…
Read Moreசக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தகவல்
Strong solar storm heading to Earth, say scientists மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில், சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில் சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பெர்ஜர் கூறியுள்ளார். இதனால் தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. பொதுவாக சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதல்ல. ஆனால் இம்முறை, சூரியனில் பெரும் காந்த…
Read Moreஅமெரிக்கா வானியல் ஆராயச்சியாளர்கள் புதிய கண்டுபிடித்துள்ளனர்
Earth-like planet raises hope of life in space மெரிக்கா வானியல் ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையில் புவியில் இருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிடித்துள்ள புதிய கிரகமானது வாழ்வாதாரத்தைக் கொண்டு விளங்குவதாக தெரிய வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலமாக புவியைப் போலவே அமைப்புடைய வேறு சில கிரகங்களும் அண்டத்தில் இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. மேலும், அவை புவிக்கு மிக அருகிலேயே இருக்கவும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புவியை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட இந்தக் கிரகமானது இரட்டை நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரத்தினை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றது. மேலும், அந்த நட்சத்திரத்திற்கும், புதிய கிரகத்திற்கும் உள்ள தொலைவானது கிட்டதட்ட சூரியன் மற்றும் புவிக்கு இடையிலான தொலைவு போன்றே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய கிரகம் சுற்றிவரும்…
Read Moreஇந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Australian Research center has warned drought risk in India இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த ஆண்டு எல்-நினோ என்று அழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தின் காரணமாக இந்தியாவில்பருவமழை குறைந்து, கடும் வறட்சி ஏற்படும் அபாயமுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியவின்வானிலை மாற்றங்களை பசிபிக் கடலின் மேற்பரப்பின்வெப்பம் தான் தீர்மானிக்கிறது. இவ்வெப்ப நிலை சீராக இருந்தால்தான், இந்தியாவின் வானிலை நன்றாகஇருக்கும். இல்லையென்றால் கடும் வறட்சி, அல்லது அதிக மழை பொழிவு உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பருவநிலை,மேற்கு பசிபிக் கடலோரபகுதியின்வெப்ப நிலைமற்றும் கடல் அழுத்தத்தையும்கணக்கிட்டு தான் கணிக்கப்படுகிறது. தள்ளிப்போகியுள்ள பருவமழை: இந்த ஆண்டு புவி வெப்பம் அதிகரித்துள்ளதால், எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு வழக்கத்திற்கு மாறாக வெப்பமாக உள்ளது. இந்தியாவில்,இந்த ஆண்டிற்க்கான…
Read Moreசெவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் : நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்
Scientists find evidence of granite on Mars செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு பின்னர் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள கிரகமாக கருதப்படுவது செவ்வாய் கிரகம். ஒருபக்கம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற பிரத்யேக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், உலக நாடுகள் செவ்வாய் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள விண்கலங்களை அனுப்பிவைத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இந்தியாவும் மங்கல்யான் என்னும் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையுமென தெரிகிறது. இந்நிலையில் செவ்வாயில் நிலபரப்புகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏற்கனவே நாசாவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் என்னும் விண்கலம், அங்கு கிரானைட் இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கிரானைட்டில் இருக்கும் பிளட்ஸ்பர் என்னும்…
Read Moreசன் கிளாஸை பயன்படுத்தி ஐபோன் சார்ஜ் அமெரிக்க வாழ் இந்தியர் சாதனை
Indian designer Sayalee Kaluskar : Ray-Ban Shama Shades with solar panels would charge your iPhone இந்த விஞ்ஞான உலக மாற்றத்தில் ஒன்றாக மாற்று மின்சாரத்தின் தேவை பற்றி விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. பலரும் பல்வேறு வித்தியாசமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள். ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும் போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகல் பொழுதில் படும் சூரியக்கதிர்கள் மூலம் கூலிங்கிளாசில் விசேசமாக பொருத்தப்பட்டுள்ள சோலார் பிரேமில் பட்டு ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சார்ஜ் செய்யும் முறையை Sayalee Kaluskar என்ர அமெரிக்க வாழ…
Read Moreமுட்டாள் அரசியல்வாதிகள் என பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் பரபரப்பு பேட்டி
Bharat Ratna awardee Scientist CNR Rao calls politicians ‘idiots’ addressing a press conference a day after the award was announced பிரதமரின் அறிவியல் ஆலோசனைகுழுவினுடைய தலைவர பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தியாவின் உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், பெங்களூரில் சி.என்.ஆர். ராவ் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அறிவியல் ஆராய்ச்சியினுடைய தரம் ஏதும் குறைந்து இருக்கிறதா என்று ஓர் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய சி.என்.ஆர். ராவ், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை ஒப்பிடும்போது அதைவிட வேகமாகமாகவும் அதிகமாகவும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த முட்டாள் அரசியல்வாதிகள், விஞ்ஞான…
Read Moreசென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு… ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.
Green organics chennai stores and Agro Food products exporters கிரீன் ஆர்கனிக்ஸ் – பசுமையகம் Green organics chennai stores and Agro Food products exporters சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு. ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??. வரும் 21ம் தேதி நவம்பர் மாதத்தில் காலை சுமார் 10.30 மணிக்கு இந்த இயற்கை அங்காடியை திறந்துவைக்க மக்கள் டிவி புகழ் ஹரிதாசன் அவர்கள் வருகிறார். இந்த அங்காடி, அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெண் சமூக சேவகர்கள் திருமதி.செல்வராணி மற்றும் திருமதி.தனலட்சுமி அவர்களால் துவங்கி நடத்தபடவுள்ளது. ரசாயன கலப்பில்லாத உணவு : ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களும், பாரம்பரிய சிறு தானியங்களும், பயிர் வகைகளும், அது சம்பந்த பட்ட உணவு பொருள் தயாரிப்புக்கள் ( ஜாம், ஜூஸ்,…
Read Moreஉடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பிரேஸ்லெட்
A Thermoelectric Bracelet To Maintain a Comfortable Body Temperature இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று…
Read More