ஆப்கான் கிரிக்கெட் அணி 2015 வருட உலகக் கோப்பைக்கு தேர்வு

Afghan Cricket Creates History; Qualifies for the 2015 world cup !   ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாக உலக கோப்பை (2015) கிரிக்கெட் தொடர் போட்டிக்கு தகுதி பெற்றது. ஐ.சி.சி., சார்பில் 12வது உலக கோப்பை தொடர், 2015 பிப்ரவரி 14 தேதி முதல் மார்ச் 29 தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும்  நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. மொத்தம் 14 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். “ஏ” பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் “பி பிரிவில் தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்  என, 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. சார்ஜாவில் நேற்று முடிந்த “வேர்ல்டு கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் தொடர் மூலம் (ஜூன் 2011 முதல் 2013 அக்., 4), 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற…

Read More

8 வயது சிறுவன் முஷீர் கான் லீக் தொடர் கிரிக்கெட் விளையாடி சாதனை

Musheer Khan is now the youngest cricketer to play Kanga League Sports கங்கா லீக் தொடரில் தனது 8 வயதில் இடம் பெற்று சாதித்துள்ளான் முஷீர் கான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் (எம்.சி.ஏ.,), 1948 முதல் நடத்தப்படுகிறது கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது). இத்தொடரில் 10 வயதில் (2007ல்) விளையாடி சாதித்தவர் சர்ப்ராஸ். இதை முறியடித்துள்ளான் இவரது சகோதரர் முஷீர் கான். தனது 8 வயதில் ஸ்போர்ட்ஸ்பீல்டு கிரிக்கெட் கிளப் அணியில் இடம் பெற்று தற்போது விளையாடுகிறார். ராஜவாதி அணிக்கு எதிரான முதல் போட்டியில், பேட்டிங்கில் ஒரு மணி நேரம் களத்தில் நின்று 42 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தான் முஷீர். ஸ்போர்ட்ஸ்பீல்டு அணியின் முதல் இன்னிங்ஸ் (87) ஸ்கோரை துரத்திய ராஜவாதி அணி 40 ரன்னில் சுருண்டது. 6 ஓவர்கள் பவுலிங்…

Read More

ஊடகங்களுக்கு சச்சின் வேண்டுகோள் என் மகனை தனியே விடுங்கள்

Cricketer Sachin Tendulkar asked media not to pressurize his son தனது மகனுக்கு தொல்லை கொடுக்காமல் நிம்மதியாக செயல் பட அனுமதிக்குமாறு ஊடகங்ககளை சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்தாண்டு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், 14 வயதுக்குட்பட்ட கிரிகெட் போட்டியில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இந்த ஆண்டு அவர் திறமையாக விளையாடவில்லை என பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஊடகங்களில் டெண்டுல்கரின் மகன் குறித்து பலவிதமாக கருத்துகளை எழுதத் தொடங்கியுள்ளனர். இதனால் சங்கட்டதிற்குள்ளன சச்சின் டெண்டுல்கர்  ஊடகங்களுக்கு எனது மகன் அர்ஜுனை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மேலும் எனது மகன் அர்ஜுன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறான். என்னை அவனுடன் தயவு செய்து ஒப்பிட்டு பார்க்கவேண்டாம், அவனை  ஒரு சாதாரண சிறுவனை போன்று பாருங்கள். இந்த செய்திகள், பொறுப்புள்ள…

Read More

டோக்கியோவில் நடக்க இருக்கிறது 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்

Tokyo wins bid to host 2020 Summer Olympics ஸ்விட்சர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆண்டு செயல்குழுக் கூட்டம் கடந்த வெள்ளியன்று துவங்கியது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தினை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.  இதில் துருக்கியின் இஸ்தான்புல் நகரைத் தோற்கடித்து ஜப்பானின் டோக்கியோ நகரம் இந்த வாய்ப்பினைப் பெற்றது. வாக்கெடுப்புக்கான முதல் சுற்றில் கனடாவின் மாட்ரிட் நகரத்துடன் சரிசமமான வாக்குகளைப் பெற்ற இஸ்தான்புல், பின்னர் நடந்த விவாதத்தில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்குத் தகுதி பெற்றது. இதன்பின்னர் நடந்த தகுதிச் சுற்றில் இஸ்தான்புல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குவஸ் ரோக் அறிவித்தார். ரஷ்யாவின் செயின்ட்…

Read More

புளோரிடா கடலை நீந்தி சாதித்த 64 வயது அமெரிக்க வீராங்கனை!

Cuba to Florida swim : Woman, 64, sets record அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார். 177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை சுறாக்கவசம் இன்றி அவர் மேற்கொண்டார். சுமார் 53 மணி நேர தொடர் நீச்சலுக்கு பிறகு புளோரிடாவின் கீ வெஸ்ட் நகர கடற்கரையை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தார். 1978-ம் ஆண்டுமுதல் 4 முறை தோல்வியை தழுவிய 64 வயதான டயானா நையத் கடைசியாக 5-வது முறையாக கடந்து வெற்றிபெற்றுள்ளார். கரையேறிய இவரை நூற்றுக்கணக்கானோர் ஆராவாரத்துடன் வரவேற்றனர். அப்போது, ஒரு போதும் முயற்சியை கைவிடாதீர்கள், வயதை கருத்தில் கொள்ளாதீர்கள்,…

Read More

செப்.21ல் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

Champions League Twenty 20 cricket tournament beginning   in Sep 21 சாம்பியன்ஸ் லீக் 2020 தொடர் வருகிற 21ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் ஐபிஎல் 6வது சீசனில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் ஹீட், பெர்த் ஸ்காச்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத், பைசலாபாத், கன்டுரட்டா, டேகோ ஆகிய 4 அணிகள் தகுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. தகுதி சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 17ம்தேதி முதல் 20ம்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் 2…

Read More

இது கெல்லாமா தண்டனை கொடுப்பாங்க!: கங்குலி

I can only laugh at that, said former captain Ganguly on Eng players urinating on the London Oval pitch இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சில் சிறுநீர் கழித்த விவகாரத்தை படித்து விட்டு சிரித்தேன் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றதை இங்கிலாந்து வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து கொண்டாடினர். அப்போது ஜாலியாக இருந்ததுடன், பிட்ச் மேலேயே சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்தினர், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கங்குலி கூறுகையில், இங்கிலாந்து வீரர்களின் செயலை படித்து பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஆனால் இதற்காக தண்டனையெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்து. எச்சரித்தோ அல்லது அபராதம் விதித்தோ விட்டு விட வேண்டியதுதான், வேறு என்ன செய்ய முடியும். அவர்கள் முதிர்ச்சியானவர்கள் பள்ளிப் பிள்ளைகள் கிடையாது.…

Read More

மைதான உதவியாளரை கட்டிபிடித்து அழுத டென்னிஸ் வீராங்கனை

Serena Williams opponent needs hug from ball boy during rout செரீனாவிடம் தோல்வி அடைந்த வீராங்கனை பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை கட்டிப் பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் செரீனா வில்லியம்ஸுக்கும், பிரான்செஸ்காகவுக்கும் இடையிலான போட்டியில் அனல் பறந்தது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய செரீனா, 6-0, 6-1 என்ற நேர் செட்களில் அதிரடியாக பிரான்செஸ்காவை வீழ்த்தினார். செரீனாவின் அதிரடி வேகத்தை சமாளிக்க முடியாமல் சுருண்டு போன பிரான்செஸ்கா, அங்கிருந்த பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை அணுகி அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நபரிடமிருந்து மீண்டு வந்த பிரான்செஸ்கா பின்னர் கூறுகையில், அந்த நேரத்தில் அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது செய்தேன். அந்த பால் பாயிடம், செரீனா மிகவும் கடுமையாக ஆடினார், ரொம்பக் கஷ்டம்…

Read More

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி

Chess training for Tamilnadu Government School teachers திருப்பூர்: தமிழக அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளிகளில் செஸ் போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கு செஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் வகுப்பு ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி தரப்படுகிறது. தாராபுரத்தில் 444 ஆசிரியர்கள், உடுமலையில் 241, திருப்பூரில் 549 என மொத்தம் 1,234 ஆசிரியர் களுக்கு வரும் 20ம் தேதி, அந்தந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 23ம் தேதி நடக்கும் போட்டிக்கு முன்னதாக, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இரண்டாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை, நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை,…

Read More

உலகக் கோப்பை ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் பரிசு

cash reward for Rani Rampal ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தொடர்நாயகியாகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஹரியாணா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். ஜெர்மனியின் மான்செங்லாட்பச் நகரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்திய அணி வெண்கலம் வென்றதைத் தொடர்ந்து அதில் இடம்பெற்றிருந்த ராணி ராம்பால் உள்ளிட்ட 6 ஹரியாணா வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்தார். இந்த நிலையில் தொடர் நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டதற்காக ராணி ராம்பாலுக்கு மேலும் ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதையும் சேர்த்து…

Read More