Sachin Tendulkar in Parliament புது தில்லி: ஆகஸ்ட் 06 2013: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு எம்.பி சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவையில் நேற்று கலந்து கொண்டார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா, தொழிலதிபர் அனு அகா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதால், அதில் சச்சின் டெண்டுல்கர் நேற்று கலந்து கொண்டார். அவை கூடுவதற்கு முன்பாகவே வந்த சச்சின், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் இணைந்து அவைக்குள் நுழைந்தார். தனது இருக்கையில் அமருவதற்கு முன் சில எம்.பி.க்களுடன் கை குலுக்கினார். இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பாராட்டு தெரிவித்தபோது, டெண்டுல்கர் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். அமளி காரணமாக அவை 10 நிமிடங்கள்…
Read MoreCategory: விளையாட்டு சிறகுகள்
கிரிகெட் மினி உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை
india wins Cricket Mini world cup மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் பொட்டில் இந்திய அபார ஆட்டத்தினால் இங்கிலாந்தை 5ரன் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் ஆனது. 2002-ல் இலங்கையுடன் மினி உலகக் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட இந்தியா, முதல்முறையாக தனித்து கோப்பையை வென்றுள்ளது. பர்மிங்காம்மில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துடன் மோதிய இந்தியா 5ரன் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கை பற்றியது, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பிர்ப்பகல் 3.00 மணி அளவில் தொடங்குவதாக இருந்தது மழையின் காரணமாக நேரம் மற்றும் ஆட்ட நேரமும் குறைக்கப்பட்டது .டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை பட்டிங் செய்ய அழைத்தது. மழையின் காரணமாக ஆட்டம் துவங்குமா என்ற கேள்விக்குறி ஆனது. 5மணி நேரம் கழித்து ஆட்டம் துவங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ரசிகர்களும்…
Read Moreகாலை இழந்த அருனிமா எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை
arunima sinha, first amputee to climb Mount Everest தன்னம்பிக்கையின் சிகரமாய் விளங்கிய அருனிமா சிங்கா தன் ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி தேசிய அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற அருணிமா சின்கா(வயது 25). உத்திர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி பணம், நகையைப் பறித்தனர். இதைப் பார்த்த அருணிமா கொள்ளையர்களை தைரியத்துடன் விரட்ட தொடங்கினார். எனினும் கொள்ளையர்கள் அதிகம் பேர் இருந்த காரணத்தினால் அவரால் விரட்ட முடியவில்லை. இந்நிலையில் அருணிமாவை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள் , ஓடும் ரயிலில் இருந்து வெளியே அருனிமாவை தூக்கி வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் வலது காலை…
Read Moreஐ பி எல் போட்டியால் அவமானம் தான் வருமானம்: ரணதுங்கா
sri lankan cricketer ranathunga ஐ.பி.எல் தொடரால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானம் தான் கிடைத்தது என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த வீரர்கள் புக்கிகள் என்று பலர் கைதாகினர். இத்தொடர் குறித்து மக்களிடம் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கையின் ரணதுங்கா கூறுகையில், ஐ.பி.எல் தொடரில் பிக்சிங் நடந்ததை அறிந்து அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில், இம்மாதிரியான சம்பவங்கள், தொடக்கத்தில் இருந்தே நடந்து கொண்டுள்ளன. இத்தொடரால் ஊழல் அதிகரிக்கும் என, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு அதிகாரி பால் கான்டன், 2008 ம் ஆண்டில் எச்சரித்தார். அவர் சொன்னது போலவே, ஒவ்வொரு ஆண்டும் பெட்டிங், பிக்சிங், போதை என்று ஏதாவது ஒன்று நடக்கத்தான் செய்கிறது. ஐ.பி.எல் தொடரால், இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. உலக கிரிக்கெட்டுக்குத் தான்…
Read Moreஐ பி எல் இறுதி போட்டியில் 2,500 கோடி சூதாட்டம்
ipl gambling final day 2,500 crores ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் இறுதிப் போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட முன்னாள் வீரர்கள், தரகர்கள் என ஏராளமானோரை கைது செய்துள்ளனர். இது தவிர மும்பை காவல்துறையினர் மற்றும் பல்வேறு மாநில காவல்துறையினர் ஆங்காங்கே சூதாட்ட தரகர்களை கைது செய்து வருகின்றனர். இத்தனை பரபரப்புக்கும் இடையில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியிலும் சூதாட்ட பந்தயம் நடந்துள்ளது. இந்த இறுதிப்போட்டியில் மட்டும் ரூ .2,500 கோடிக்கு சூதாட்ட பந்தயம் (பெட்டிங்) நடந்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் சில…
Read Moreசிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்
Sivanthi Adityan died சென்னை 20 ஏப்ரல் 2013 : டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் (வயது 76), உடல்நலக் குறைவினால் கடந்த 3 மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19-ந் தேதி (நேற்று – வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல். Sivanthi Adityan died Real Estate Chennai = Buying selling Rent and Lease
Read Moreடெல்லி டேர்டெவில்ஸக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட்: சூப்பர் கிங்ஸ் வெற்றி
டெல்லி: 17Apr2013: சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. chennai super kings victory against delhi
Read Moreஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூ
ipl-cricket-bangalore-won டெல்லி டேர்டெவில்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். டெல்லி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுக்கவே ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. அதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பெங்களூர். பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி, டெல்லியை பேட் செய்ய அழைத்தார். டெல்லி அணியில் வார்னர்-சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது. வார்னர்…
Read Moreவீடு திரும்பினார் கோமாவில் இருந்த கிரிக்கெட் வீரர்!
நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஜெசி ரைடர் சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் பார் ஒன்றின் அருகில் மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். படுகாயமடைந்த இவர் மருத்துவமனையி அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மருத்துவமனியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான வெலிங்டனுக்கு விமானம் மூலம் சென்றார். கோமாவிலிருந்து மீண்ட நிலையில், சில நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ள ரைடருக்கு மற்ற விடயங்கள் நினைவில் உள்ளபோதும், அவர் மீது நடந்த தாக்குதல் சம்பவம் மட்டும் நினைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreநான் கிரிக்கெட் கடவுளா' மனம் திறக்கிறார் சச்சின்
“”மற்றவர்களைப்போல நானும் சாதரண மனிதன் தான். கிரிக்கெட் கடவுள் அல்ல,” என, சச்சின் தெரிவித்தார். இந்திய அணியின் “மாஸ்டர்’ பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச அளவில் சதத்தில் சதம் அடித்து சாதித்தார். இவரை, இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் கடவுளாக பார்க்கின்றனர். இது குறித்து சச்சின் கூறியது:நான் கிரிக்கெட்டின் கடவுள் இல்லை. கடவுள் எப்போதும் தவறுகள் செய்யாதவர். போட்டிகளில் மற்ற வீரர்களைபோல நானும் தவறுகள் செய்கிறேன். இந்திய வீரர் கவாஸ்கரைப்போல் ஆக வேண்டும் என்பது எனது குழந்தை பருவ கனவு. பின் வளர்ந்துவரும் காலங்களில் நான் மிகவும் ரசித்தவர் ரிச்சர்ட்ஸ். அவரின் ஆட்டத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதனால் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் கலந்த கலவையாக நான் உருவெடுக்க விரும்பினேன். எனது 100வது சதத்தை எட்டிய போது குதித்து ஆரவாரம் செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில்…
Read More